3-2-24
நண்பர்களே கடந்த எட்டு நாட்களாக காலையில் எழுந்தவுடன் துவங்கி இரவு படுக்கும் வரை செய்ய வேண்டிய பாரம்பரியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.
காற்று, நீர், நிலம், உணவு அனைத்தும் விஷமாக மாறி விட்டது கண்கூடாக அறிவோம்.
பற்பசையில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. பாலில் பெண் குழந்தைகளை பாதிக்கும் ஹார்மோன்கள் உள்ளன. வெள்ளை சர்க்கரையில் தொல்லை தரும் ரசாயனங்கள் உள்ளன. கோதுமை மைதா போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்க வல்லவை. எனவே இவர்களை தவிர்த்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
மிக அத்தியாவசியமாக மாறிவிட்ட RO waterஇன்னும் சில ஆண்டுகளில் தடை செய்யப்பட கூடும். எனவே நமது பாரம்பரிய முறைப்படி கிடைக்கும் நீரை கொதிக்க வைத்து மண்பானையில் ஊற்றி தேவை எனில் வெற்றிவேல் நன்னாரே தேத்தாங்கொட்டை பதிமுகம் போன்ற மூலிகைகளை பயன்படுத்தினால் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்.
தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறியபடி
" மருந்தென யாக்கைக்கு
வேண்டாவாம் அருந்தியது
அற்றது போற்றி உணின்"
இந்த வருடம் 56 ஆங்கில மருந்துகள் தர மற்றவை என்று உலக சுகாதர நிலையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
அவசியமின்றி அனாவசியமாக அடிக்கடி வலிமாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் . பிற்காலங்களில் சிறுநீரகங்கள் சீரழிவுக்கு இதுவே மிக முக்கிய காரணம்.
பால் மற்றும் வெள்ளை சர்க்கரை இல்லாமல் நம்மால் வாழ இயலும்.
வலி , சளி ,போன்ற பிரச்சனைகளுக்கும், பொற்றா நோய்களுக்கான மருத்துவம் உணவிலேயே உள்ளது. நமது பாரம்பரிய வைத்திய முறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
பாட்டி வைத்தியம் வீட்டு மருத்துவம் ஐந்தரைப் பெட்டி இவைகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
நமது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி நபர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உள்ளது இவற்றை தமது பாரம்பரிய உணவு முறைகளால் சீர் செய்து கொள்ளலாம். சர்க்கரை நோயின் முக்கிய மருந்தாகிய மெட்ஃபார்மின் கோடிக்கணக்கில் விற்பனையாகி கொண்டிருக்கின்றது.இந்த மருந்து இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது..
தொற்று நோய்களுக்கான சில நோய்களுக்கு (காலரா, மலேரியா,டைபாய்டு, எலி காய்ச்சல்...etc )அவசியம் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிகுந்த ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெளிவரும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அவசியம் போட வேண்டும்.
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவரை குடும்ப மருத்துவராக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள படித்த பிள்ளைகளுக்கு எங்கள் நிறுவனம். M S international அளிக்கும் இலவச அடிப்படை மருத்துவ கல்வி முறைகளை கற்றுக் கொள்ள சொல்லுங்கள்.
ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுங்கள். அவசியம் மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச மருத்துவ காப்பீடு எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. வசதி உள்ளவர்கள் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கப்பல் செய்து கொள்ளுங்கள்.















































