வாழ்க வளமுடன்
நீக்கமற நிறைந்திருக்கும் சீரிளமைத்திறம் வாய்ந்த தமிழ் அன்னையை வணங்கி இந்த கட்டுரையை எழுதுகிரேன் .
உலக நாடுகளும் மத்திய அரசும் மாநில அரசும் 2023 வது ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கின்றன.
ராமநாதபுரத்தை சார்ந்த டாக்டர் எஸ் முருகேசன் என்பவர் IOFA என்ற நிறுவனத்தை நிறுவி தரிசு நிலங்களை கூட எளிதாக அதிக தண்ணீர் தேவை இன்றி விளையும் சிறுதானியங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து அதனை அவர்களிடமிருந்து பெற்று மதிப்பு கூட்டி மக்களுக்கு MS international என்ற நிறுவனத்தின் வாயிலாக உடனடியாக சமைத்து உண்ணும் வகையில் துணை உணவுப் பொருள்களை உருவாக்கி அளித்து வருகிறார்.
இவர் கோவை விவசாய கல்லூரியில் விவசாய பட்டபபடிப்பு முடித்து மத்திய அரசில் அரசில் முக்கிய பதவியில் வகித்து மத்திய அரசு வழங்கும் மானியங்களைப் பெற்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்த்தவர்.
இவர் ராமநாதபுரத்தை சார்ந்தவர் என்பதால் அங்குள்ள நீர் மேலாண்மை கருதி பணிவரகு, வரகு, கம்பு , திணை சாமை, வாலி போன்ற சிறுதானியங்களை பெரும் அளவில் விவசாயம் செய்து மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்.
இவர் சிறுதானியங்களில் உள்ள மருத்துவ குணங்களை ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டம் பெற்று தமிழக மக்களுக்கும் மற்ற மக்களுக்கும் பேருதவிகளை செய்து வருகிறார்.
இவருடன் இணைந்து BSB healthcare என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்ற திரு lion பாலச்சந்தர் அவர்கள் சிறுதானியங்களின் மூலம் எவ்வாறுதொற்றாநோய்களான
உடன் பருமன்
ரத்தசோகை
சர்க்கரை நோய்
உயர் இரத்த அழுத்தம்
சில வகை புற்று நோய்கள் ஆகியவற்றை எவ்வாறு கண்டறிந்து அவற்றுக்கு உணவின் மூலமாகவே எவ்வாறு தீர்வு தருவது என்பதை சிறு பயிற்சியாக அளித்து வருகிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு அவரவர் இல்லத்தில் பாட்டி,தாத்தா போன்ற உறவுகளுடன் வாழ கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.
ஒவ்வொரு இல்லத்திலும் அனுபவமுள்ள முதியோர் இருந்தால் அவர்கள் சிறுதானியங்களில் பயன்பாட்டை நமக்கு தினமும் கிடைக்கும் வகையில் செய்திருப்பார்கள் இருப்பார்கள் தமிழகத்தில் பெயர் பெற்ற பாட்டி வைத்தியம் , கை வைத்தியம் என்ற ஒன்று இன்று மறைத்து போய் இருக்காது. ஐந்தரைப்பெட்டி என்ற ஒன்று நம் சமையல் அறையில் இருந்து காணாமல் போய்விட்டது
இத்தகைய பாரம்பரியத்தை மீட்டு எடுப்பதற்காக முயற்சியை டாக்டர் முருகேசன் அவர்களும் பாலச்சந்திரன் அவர்களும் சில சிறிய திட்டத்தை வகுத்து அதனை தமிழகமெங்கும் கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 களில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது சிறுதானியங்களும் மரவள்ளிக்கிழங்கும் நமது தேவையை பூர்த்தி செய்து வந்தன. அப்போது ஏற்பட்ட
தொழிற்பெயர்ச்சி
பசுமைப் புரட்சி
வெண்மை புரட்சி போன்றவற்ரால் ஐஆர் 8 போன்ற கலப்பின அரிசி பெருமளவில் பயிரிடப்பட்டது அதிக மகசூல் தரும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக முழுவதும் பயிரிடப்பட்டன.
வட இந்தியாவில் கோதுமையை அதிகமாக பயிரிட்டார்கள். இந்த அரிசியும் கோதுமையும் தான் இன்றைக்கு நமது இந்தியாவை உலக அளவிலே அதிக சர்க்கரை நோய் உள்ளவர்களாக உயர்தி காட்டி இருக்கிறது.
எனவே நாம் அனைவரும் சற்று சிந்தித்து சிறுதானியங்களை மீண்டும் நம் பயன்பாட்டிற்குள் கொண்டுவர எங்களோடு இணைந்து சமுதாய பணியாற்ற பிளஸ் டூ படித்த மாணவர்களையும் விவசாயிகளையும் அன்புடன் அழைக்கிறோம்.
என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 1955 இல் நான் உத்திரமேரூர் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தேன் . என் தந்தை M.P. ராமச்சந்திரன் என்பவர் திரைப்பட த்துறையில் வேலை வாய்ப்பை நாடி சென்னை வடபழனிக்கு இடம்பெயர்ந்தோம். அவரது முதல் படம் நாடோடி மன்னன் என்ற படத்தை புரட்சித்தலைவர் உடன் பணியாற்றிய வாய்ப்பு பெற்றார்.
இங்கே ஏன் நான் புரட்சித்தலைவர் அவர்களை மேற்கோள் காட்டுகிறேன் என்றால் அவர் அவரது உணவில் கேழ்வரகு கலியாகவும் தகுதியாகவோ தினமும் எடுத்துக் கொண்டார் சிறுதானிய பாயாசத்தை தினமும் அவர் தாயாரின் படத்தில் படைத்து வந்து போவோர் அனைவருக்கும் அதை வழங்கினார் அவரது உடல் உறுதிக்கு சிறுதானியங்கள் தான் ஒரு காரணம் என்பதை நான் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன் எட்டாம் வகுப்பு வரை எம்ஜிஆர் பள்ளியிலும் உயர்நிலை கல்வியை ஏவிஎம் அவிழ்ச்சி பள்ளிகளும் புது புத்தக வகுப்பு ல லாலா கல்லூரியிலும் படித்து பின்னர் மருத்துவத்துறையில் மீது உள்ள ஆர்வம் காரணமாக சென்னை கிண்டியில் உள்ள தென்நிலையத்தில் மருத்துவ ஆய்வக பயிற்சியை பெற்றேன் அங்கே மனித மாத்திரைகளை பரிசோதிப்பது மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களை பரிசோதிக்கும் நாம் தினமும் அருந்தும் தண்ணீரை பரிசோதிக்கும் மாற்றம் அனாலிசிஸ் பதிவும் ஆங்கில மருந்துகளை ஆய்வு செய்யும் என்பதால் அந்த பிரிவுகளில் சென்று பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன் அங்கு தான் சிறுதானியங்களில் மதிப்பு எனக்கு அறிய நேரிட்டது அங்கே அவர்கள் வளர்த்து வரும் எலி முயல் ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு சிறுதானியங்களை மாகாளிப்பார்கள் குறிப்பாக எலிகளின் இனப்பெருக்கம் மூக்கு கடலை வேர்க்கடலை போன்றவற்றை உணவாக பெற்றதால் கிடைத்தது என்பதை அறிந்தோம்.
அங்கே உள்ள உணவு பகுப்பாய் உலகத்தில் ஆய்வகத்தில் நாம் உண்ணும் உணவில் புரதோஷத்தை எவ்வளவு உள்ளது மாவு சத்து எவ்வளவு உள்ளது நார்சத்து எவ்வளவு உள்ளது உன்னதகாதது ஏதாவது கலப்படமாக உள்ளதா என்பதை பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
ஆண்டுகளில் நான் பெற்ற இந்த பயிற்சியை தற்போது 90 நாட்களில் சிறக குறைத்து ஒரு பயிற்சியாக தமிழக மக்களுக்கு அளிக்கவிருக்கின்றேன்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தொற்ற நோய்களுக்கான பகுப்பாய்வுகளை இந்தியா முழுவதும் அமைக்கவிருக்கிறது அதன் வாயிலாக சிறுதானியங்களின் மருத்துவ குணங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க இருக்கின்றது
எங்கள் எங்கள் நிறுவனம் தமிழகத்தில் சுமார் 10,000 பயிற்சி மையங்களை விரைவில் உருவாக்க இருக்கின்றது குறிப்பாக மருத்துவ வசதியற்ற கிராமங்களிலும் மலை கிராமங்களிலும் அமைக்க இருக்கிறோம் அங்கே வசிக்கும் பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தகைய சிறிய ஆய்வகங்கள்மூலம் உடல் பருமன் ரத்த சோகை ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், கருத்தரிக்க இயலாமை புற்றுநோய் போன்றவற்றை எவ்வாறு எளிதாக கண்டுபிடித்து அதற்கான தீர்வை உணவின் மூலமாகவே எவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதை தமிழக மக்களுக்கு அளிக்க இருக்கிறோம்.
