திங்கள், 26 பிப்ரவரி, 2024

பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் எபிசோட் 3

 அன்பிற்குரிய நண்பர்களே நமது முன்னோர்கள் வாழ்ந்த பாரம்பரியமான வாழ்க்கை முறையை முடிந்த வரை பின்பற்ற 10 கட்டளைகளை தினம் ஒன்றாக தந்து கொண்டிருக்கிறேன் படித்து பாருங்கள். பிடித்திருந்தால் கடைப்பிடியுங்கள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பொது மொழி.

நாம் இழந்த வாழ்க்கையை மீண்டும் நம் சந்ததிகளுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் உங்கள் செல்வங்களை அதிகாலையில் படுக்கையிலிருந்து எழ செய்ய வேண்டும்.

காலை கடன்களை கடந்த இரண்டு எபிசோடுகளில் கூறியவாறு முடிக்க வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில் கழிப்பிடங்கள் ஊருக்கு வெளியேயும் அல்லது வீட்டிற்கு வெளியே புறக்கடையிலும் இருந்தது ஆனால் இன்று வீட்டுக்குள்ளேயே அட்டாச் பாத்ரூம் என்ற அளவில் சுருங்கி விட்டது எனவே காலைக்கடன்களை முடிக்க சற்று தூரம் கலார நடந்து சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து கடன்களை முடியுங்கள்.

மலச்சிக்கல் இல்லாத காலை பொழுதே மிக மகிழ்ச்சியான நாளை தரும் எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் நார்சத்து மிகுந்த உணவுகளையும் (கீரைவகைகள்) இறவில் திரிபலா என்கின்ற மாத்திரையும் எடுத்துக் கொள்ளலாம்

வைகறையில் எழுந்து காலை கதிரவன் முன் சில நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் என்கின்ற ஒரு சிறு யோகா பயிற்சியினை முடிந்த அளவு ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள்.



முதியோர்களும் மற்றவர்களும் நாற்காலியில் அமர்ந்தபடி இந்த உடற்பயிற்சியினை முடிந்தவரை செய்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும்.

இந்த காணொளியை காட்சியை கண்டு முயற்சி செய்யுங்கள்

https://youtu.be/TbfeUeOCwmo?si=B9_QskOceMscxQBv



குறிப்பாக ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக இந்த பயிற்சியை செய்தாக வேண்டும் ஏனெனில் அவர்கள் இயற்கைக்கு மாறாக பகலில் உறங்கி இரவில் விழித்திருந்து சூரிய ஒளி படாமல் வாழ்வதால் அவர்களுக்கு பிற்காலத்தில் விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு அதுவே குழந்தையின்மை என்கின்ற மலட்டுத்தன்மைக்கும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புள்ளது.

வைட்டமின் டி குறைபாடு கண்டறிய 2000 ரூபாய் செலவாகும் பிறகு அதற்கான மருந்துகள் இல்லை என்பதால் மீண்டும் சூரிய ஒளியில் நிற்க சொல்வார்கள். எனவே டிரீட்மென்ட் இஸ் பெட்டர் தன் பிரிவென்ஷன் என்பதற்கு ஏற்ப வருமுன் காப்போம் வாழ்க வளமுடன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...