பாரம்பரியத்தை மீட்போம்
வைகறை துயில் எழுந்து ,காலை கடன்களை முடித்துவிட்டு, காலர நடந்து, சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமும், சாத்வீகமான காலை உணவு எடுப்பதன் மூலமும் நம் வாழ்நாள் முழுவதும் இலவசமாக விட்டமின் டி மற்றும் விட்டமின் பி 12 ஐ பெற்று குறைவின்றி வாழ முடியும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
நமது முன்னோர்கள் காலையில் ஏழையை போலவும் மதியத்தில் அரசன் போலவும் இரவில் ஆண்டியை போலவும் நம் உணவை உண்ண சொல்லி இருக்கிறார்கள்.
பாரம்பரியமாக நம் முன்னோர்கள் சிறுதானியங்களையும் தினமும் , நெல்லு சோற்றை விழாக்காலங்களிலும் பயன்படுத்தி வந்தார்கள்.
அதிலும் குறிப்பாக ஆறு மாத பயிர் வகைகளையும் பாரம்பரிய நெல் வகைகளையும் கைக்குத்தல் அரிசியாக தயாரித்து பயன்படுத்தினார்கள்.
50 களில் வந்த பஞ்சம் காரணமாக பசுமை புரட்சி காரணமாக கலப்பின நெல் வகைகள் கோதுமை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவர்களில் உள்ள அதீத மாவு சத்து இந்தியர்களுக்கு உடற்பருமனையும் சர்க்கரை நோயையும் இணைப்பாக தந்துவிட்டது.
MS international நிறுவனமும் BSB health care நிறுவனமும் மக்களுக்கு இந்த நவீன அரிசியை அறிமுகப்படுத்துகிறது. மதிய உணவாக இந்த அரிசியை தினம் 100 கிராம் அளவுக்கு பயன்படுத்துங்கள்.
நல்லது கேரள மக்கள் பயன்படுத்தும் கார் வரிசையை பயன்படுத்துங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் சொர்ணா முசிறி வகைகளையும் பயன்படுத்தலாம்.
தினம் ஒரு கீரையை வாரம் ஒரு முறை கண்டிப்பாக முருங்கைக்கீரையை
உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மதிய உணவு எடுத்துக்கொள்ளும் 15 நிமிடங்களுக்கு முன் நாம் அறிமுகப்படுத்தும் முடவாட்டுக்கால் சூப்பினை ஸ்டார்டராக எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்த சூப்புடன் Dafonil நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த சூரணத்தில் 5 கிராம் கலந்து பயன்படுத்துங்கள்..
முதியோர்கள் உணவிற்குப் பிறகு வெற்றிலை பாக்கு நெல்லிக்காய் வற்றலுடன் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.
இளைய தலைமுறையினர் உணவிற்கு பின்னர் கோவில்பட்டி கடலை மிட்டாய் சுக்கு மிட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
இனிய மதிய வணக்கம்
மாலையில் சந்திப்போம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக