2-3-24
நண்பர்களே மதிய உணவை முடித்து விட்டோம் உணவு பிடித்த உடன் ஒரு 200 ml மோர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.உணவிற்குப் பிறகு சுக்கு மிட்டாய் அல்லது சுக்கு வேர்கடலை கலந்த வருகை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாலையில் சிற்றுணவாக முளைக்கட்டிய நவ தானியங்களில் ஏதாவது ஒன்றை சுண்டலாகவோ அல்லது mixture ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.
வள்ளலார் கூறியபடி காலையில் இன்று கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் எடுத்து கொண்டால் வாதம், பித்தம், கபம் இந்த மூன்றும் சமநிலையில் இருந்து நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றி சம நிலையில் வைத்திருக்கும்.
திருவள்ளுவரும் இதைத்தான்
குறையினும் மிகினும் நோய் செய்யும்நூலோர் வளிமுதலா சொல்லிய மூன்று. என்று கூறிச் சென்றுள்ளார்.
கூடுமானவரை ஏழு மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள் தேவை எனில் பழங்கள் பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு முடிந்தால் சிறிதளவு பாலிலோ அல்லது நீரிலோ அஸ்வகந்தா திரிபலா பாதாம் பவுடர் கலந்து பருகுங்கள்.
இரவு நல்ல உறக்கம் வரும் அதிகாலையில் மலச்சிக்கல் இல்லாத பொழுது உங்களுக்கு விடியும்.
நன்றி மீண்டும் நாளை சந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக