திங்கள், 25 மே, 2026

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்*

முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே அந்த நோய் வருகிறது. காரணம் வாழ்வியல் முறையும், உணவு பழக்க வழக்கங்களும். அது தொடர்பாக நீரழிவு நோய்க்கு காரணம் என்ன அல்லது அதன் அடிப்படை உடலியல் செயல்பாடுகள் என்ன என்பதை விளக்கும் ஒரு சிறு பதிவு இது.

முதலில் நீரழிவு அல்லது சர்க்கரை நோய் என்றால் என்ன என்பது பற்றி சிறிய மேம்போக்கான விளக்கம். (இது ஆழ்ந்த விளக்கம் அல்ல.)

நம் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் சக்தி தேவை. அதைத் தருவது நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து அல்லது கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரைச் சத்து. உதாரணமாக நாம் ஒரு சிறிய குண்டூசியை எடுக்கக் கூட விரலில் உள்ள பல லட்சம் செல்கள் நேரடியாக அதற்காக உழைக்க வேண்டும். தசை செல்கள் முதல் நரம்பு செல்கள் வரை உழைத்து அந்த விரலை அசைத்து குண்டூசியை அழுத்தமாகப் பிடித்துத் தூக்க வேண்டும். இதைத் தவிர மறைமுகமாக கண்கள் முதல் மூளை வரை பல உறுப்புகளும் பணியாற்ற வேண்டும். நாம் அதில் நேரடியாக செயல்படும் விரலை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

அந்த விரலின் செல்கள் எந்த ஆற்றல் மூலம் பணி செய்கின்றன? ஒவ்வொரு செல்லிலும் மைட்டோகாண்ட்ரியா என்ற அமைப்புகள் செல்லுக்குள் இருக்கும். இவை தான் செல்லின் பவர் செண்டர் அல்லது என்ஜின் போன்றது. இந்த மைட்டோகாண்ட்ரியா தான் நாம் உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸாக மாற்றப்பட்ட கார்போஹைட்ரேட்டை எரித்து சக்தியை உருவாக்குகிறது.

அது போல நூற்றுக்கணக்கான மைட்டோகாண்ட்ரியாக்கள் ஒவ்வொரு செல்களிலும் இருக்கும். அது போன்ற பல லட்சம் செல்களின் செயல்பாட்டால் உருவாகும் சக்தி தான் நாம் ஒரு குண்டூசியைத் தூக்கும் சக்தி விரல்களுக்குக் கிடைக்கும்.

அந்த சக்தி கிடைக்க தேவையான முக்கியமான மூலப் பொருட்கள் குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன். இவை இரண்டும் எப்படி ஒவ்வொரு செல்களுக்கும் கிடைக்கின்றன? இரத்தம் தான் அவற்றை ஒவ்வொரு செல்களுக்கும் கொண்டு சேர்க்கிறது. இரத்தத்தில் இருந்து பெறப்படும் குளுக்கோஸையும் ஆக்ஸிஜனையும் மைட்டோகாண்ட்ரியா எரித்து சக்தியோடு கார்பன்டை ஆக்ஸைடையும் நீரையும் வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் கார்பன் டி ஆக்சைடும் நீரும் கூட செல்களில் இருந்து இரத்தத்தின் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது. 

இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற அதிகப்படியான நீரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றி விட்டு கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரல் மூலம் வெளியேற்றுகிறது. கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் போதே அதே இரத்தம் நுரையீரல் மூலம் சுவாசக்காற்றில் இருந்து ஆக்ஸிஜனை பெறுகிறது. அதன் பின் ஜீரண மணடல உணவுப் பாதை மூலம் ஜீரணிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்டான குளுக்கோஸைப் பெறுகிறது. இது தான் சக்தி உருவாக்க சுழற்சி.

இந்த குளுக்கோஸின் அளவு இரத்தத்தில் கூடினால் பல்வேறு பின் விளைவுகள் வரும்.  குறைந்தால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. இதைக் கட்டுப்படுத்துவது தான் இன்சுலின் என்ற ஒரு சுரப்பு. இது கணையத்தின் (Pancreas) பீட்டா செல்கள் சுரக்கும் ஒரு ஹார்மோன். 

இந்த இன்சுலினின் வேலை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்லில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவுக்கு எடுத்துச் செல்கிறது. எப்போதெல்லாம் உடல் வேலை செய்கிறதோ அப்போதெல்லாம் அந்த வேலையோடு தொடர்புடைய உறுப்புகளின் செல்களுக்கு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்திக்குத் தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருக்கும் இன்சுலின் செல்லில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவுக்குக் கொண்டு செல்கிறது. அந்த செல்லுக்கு எவ்வளவு சக்தி தேவையோ அதற்குத் தகுந்த எரிபொருளாக குளுக்கோஸை கொண்டு செல்கிறது இன்சுலின். அதாவது எவ்வளவு குளுக்கோஸ் எந்த செல்களுக்கு எப்போது தரவேண்டும் என்பதை நிர்ணயிப்பது இந்த இன்சுலின் வேலை.

எப்போதெல்லாம் உடலுக்கு சக்தி தேவைப்படுகிறதோ அப்பபோதெல்லாம் இன்சுலின் மூலமாக செல்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டு இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். அதை சரி செய்ய உடல் ஜீரணித்து தான் சேர்த்து வைத்துள்ள குளுக்கோஸை தேவைக்கு எற்ப இரத்தத்தில் கலந்து கொண்டே இருக்கும். அப்போது இரத்த சர்க்கரை அளவு தேவையான அளவுக்கு மீண்டும் நிலை நிறுத்தப்படும். இந்த சக்தி தேவையின் போது உடல் குளுக்கோஸை இரத்தத்தில் கலப்பதும், அந்த குளுக்கோஸை இன்சுலின் செல்களுக்கு எடுத்து செல்வதும், தேவை முடிந்ததும் இந்த செயல்பாடுகள் குறைவதும் கணையம் தன் இன்சுலின் சுரப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. முடிவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய அளவுக்கு தகுந்தாற் போல இன்சுலினை சுரப்பது கணயத்தில் உள்ள பீட்டா செல்களின் வேலை.

அடுத்து நாம் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்
பொதுவாக சர்க்கரை நோய் என்பது இந்த பீட்டா செல்கள் சரியான முறையில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது தான் சர்க்கரை நோய் என்பது. இந்த பீட்டா செல்கள் சரியான முறையில் சுரக்காமல் இருப்பதற்கு நம்முடைய வாழ்வியல் முறையும் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அது போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்களினால் பாதிக்கப்பட்ட பீட்டா செல்கள் தனது சுரப்பை சரியாக சுரப்பது இல்லை. 

உடல் தனக்கு சக்தி தேவை எனும்போது ரத்தத்திலிருந்து சர்க்கரை எதிர்பார்க்கும். அப்போது பீட்டா செல் பாதிப்பினால் இன்சுலின் சுரப்பு குறைந்து ரத்தத்தில் இருந்து சர்க்கரை செல்களுக்கு கிடைக்காத போது உடல் ரத்தத்தில் சர்க்கரை இல்லை என்பதாக கணக்கில் கொண்டு உடலில் உள்ள சேர்த்து வைத்த சர்க்கரையை எடுத்து தொடர்ந்து இரத்தத்தில் கலந்து இரத்த சர்க்கரையின் இருப்பை அதிகரிக்கும். அதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக்கொண்டே போகும். இன்சுலின் சரியான அளவு சுரக்காததனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்கு செல்ல முடியாது போகிறது உடல் சோர்வு அடைகிறது. 

தற்போது நடைமுறையில் உள்ள இதற்கான சிகிச்சை முறைகளை இரண்டு விதமாக சொல்லலாம். 
1. ஆங்கில மருத்துவம் – Allopathic Medicine
2. இயற்கை மருத்துவம் 

ஆங்கில மருத்துவம் என்ன செய்கிறது என்று மேலோட்டமாக கூறினால் அந்த கணையத்தில் உள்ள பீட்டா செல்களை வேதிப்பொருட்களின் மூலம் தூண்டி அந்த பீட்டா செல்களை இன்சுலின் சுரப்பை சுரக்க வைக்கிறது அல்லது அந்த பீட்டா செல்கள் முற்றிலுமாக செயல் இழந்து போய் இருக்கும்போது இன்சுலின் என்ற அந்த ஹார்மோனை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்துவது இன்னொரு முறையாகும். மொத்தத்தில் இன்சுலின் செய்யவேண்டிய வேலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த மருந்து செய்கிறது அல்லது செய்ய தூண்டுகிறது. அதாவது நம் உடல் தன்னிச்சையாக செய்யவேண்டிய வேலையை மருந்துகள் மூலம் செய்கிறது அல்லது செய்ய வைக்கப்படுகிறது.

இயற்கை மருத்துவம் நமது சாதாரண உணவு மூலமோ அல்லது மூலிகை பொருட்கள் மூலமாகவோ அந்த பீட்டா செல்களை தூண்டி தானாக தன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. அல்லது ரத்தத்தில் இருந்து செல்லுக்குள் உள்ள மைட்டோகாண்ட்ரியாவுக்கு குளுக்கோஸை எடுத்து செல்லும் செயல்பாட்டை சரி செய்கிறது அல்லது மைட்டோகாண்ட்ரியாவின் உள்ளே அதன் செயல்பாடுகளை சரி செய்கிறது.

இதில் எந்த வகை மருத்துவம் நல்ல மருத்துவம் அல்லது சரியான மருத்துவம் என்று வாதிட்டால் அவரவர் தங்களுடைய மருத்துவம் தான் சிறந்தது என்று விவாதிப்பார்கள். உண்மையில் ஆரம்ப கால கட்டத்தில் இருக்கும் நீரழிவு நோயாளிகள் இயற்கை மருத்துவத்திற்கு செய்வது பரிந்துரைக்கத் தக்கது. அதே சமயம் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு இயற்கை மருத்துவம் வேகமாக சரி செய்யாது. ஏனென்றால் இப்போது உள்ள காலகட்டத்தில் அவர்களின் உணவு முறையும் வாழ்வியலும் மிகவும் அதிகமாக சிதைந்து இருப்பதால் பழங்கால முறைகளான இயற்கை மருத்துவம் சில சமயம் தேவைக்கான வேகத்தில் செய்யாது. 

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது. ஏனென்றால் நம் உடல் தன்னிச்சையாக வேலையை அந்த அல்லோபதி மருந்துகள் செய்ய ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக பீட்டா செல்களின் செயல்பாடுகளை எடுத்துக்கொள்வோம். அல்லோபதி மருந்துகள் பீட்டா செல்களின் செயல்பாடுகளை செய்ய ஆரம்பிக்கும் போது பீட்டா செல்கள் தனக்கு வேலை இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிச்சையாக செயல்படும் தன்மையை இழந்து வரும். அப்படி செயலிழக்க செயலிழக்க மருத்துவர் தரப்பட வேண்டிய மருந்தின் வீரியத்தை உயர்த்திக் கொண்டே வருவார். அதாவது சர்க்கரை நோயின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது அதன்பின் ஒரு நிலையில் பீட்டா செல்கள் முற்றிலுமாக செயல் இழந்து அது சுரக்க வேண்டிய இன்சுலின் சுரப்பை சுரக்காமல் நிறுத்திவிடும். அப்படி ஒரு நிலை வரும் போது இன்சுலினை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்தும் நிலைக்கு நாம் ஆளாகிறோம். மேலோட்டமாக இது தான் அல்லோபதி மருத்துவம்.

அதற்கு பதில் நாம் இயற்கை மருத்துவத்தின் பக்கம் போனால் நாம் சாப்பிடும் உணவும் நாம் சாப்பிடும் மூலிகைகளும் அந்த கயணத்தையும் அதில் இருக்கும் பீட்டா செல்களையும் சரி செய்து தானாக தனக்கு வேண்டிய இன்சுலின் சுரக்க வழி செய்கிறது. நீரிழிவு நோய்க்கான இயற்கை வைத்தியம் கண்டிப்பாக ஒரே நாளில் அல்லது ஒற்றை நேர மருந்தில் அல்லது அலோபதி போன்ற குறைந்த காலக்கட்டத்தில் நடக்காது. இயற்கை மருத்துவம் நீண்ட நாட்களாக நிதானமாக செயல்பட்டு தானாக உடலை தன் நிலைக்கு திரும்பும் வழி. முறையாக தயாரிக்கப்பட்ட இயற்கை வழி மருந்துகள் அல்லது உணவு மூலம் சரி செய்தல் போன்றவற்றில் பெரும்பாலும் பக்க விளைவு எதுவும் இருக்காது.

சரி அப்படியானால் எல்லோருமே மொத்தமாக இயற்கை மருத்துவத்திற்கு செல்லலாமா என்றால் அதுவும் சரியல்ல. இயற்கை மருத்துவம் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இயல்பாக அதனை சரி செய்ய முடியும். ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் அந்த அளவுக்கு பொறுமையாக அதன் கட்டுப்பாடுகளோடு மருந்து எடுக்க யாரும் தயாராக இல்லை அதனால் அல்லோபதி மருத்துவத்தின் மூலம் ஓரளவு சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் பின் இயற்கை மருத்துவத்தை இணையாக சாப்பிட்டு உடலை நல்ல நிலைக்கு திருப்பிக் கொண்டு வரலாம். 

எங்களது நிறுவனம் கீழே இருக்கும் நீரழிவு நோய்க்கான நமது பாரம்பரிய மூலிகைகளைக் கொண்டு சூப் பொடி தயாரித்து வருகிறது. அந்த சூப் பொடியில் இருக்கும் மூலிகைகள் பட்டியல் கீழே உள்ளது.

சிறுகுறிஞ்சான்
கறிவேப்பிலை
பெருஞ்சீரகம்
நெல்லிக்காய் 
நாவல் விதை 
வேப்ப இலை
மல்லி விதை
ஆவாரம் பூ
அருகம்புல் 
வெந்தயம்
புதினா 
சீரகம்
ஓமம்
மற்றும் பல…

Price Details
நீரழிவு நோய்க்கான சூப் பொடி 
5gm - ₹ 15 
50 gm - ₹ 100  
250gm - ₹ 460
+ எத்தனை எண்ணிக்கையாக இருந்தாலும் ஒரே கூரியர் செலவு
₹ 50 தமிழ் நாடு மற்றும் ₹ 100 மற்ற மாநிலங்கள்

வெள்ளி, 15 மே, 2026

அடுத்தது என்ன? +2 க்கு பிறகு ....

https://docs.google.com/document/d/1Wq5mEA7NnRK5NLfA0p7uO_ci3b8IISUrFAzY7J7lV4Y/edit?usp=sharing

12 வது படித்த  மாணவர்களுக்கு 

 வேலை  வாய்ப்பு தரும் 

 இனை மருத்துவ பயிற்சிகள்


    தமிழக மாணவர்களின் நிலைபாடு என்ன


தமிழகத்தில் ஆண்டு தோறும் சுமார் 8  லட்சம்  மாணவர்கள் 

பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுதுகிறார்கள்


இவர்களில் 7 லட்சம் மாணவர்கள் தேர்சி பெற்று மேல் படிப்பை 

தொடர்கிறார்கள்


மாணவர்களின் அனைவரின் ஆசையும் மருத்துவம் அல்லது 

பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து படிப்பது தான்.


இவர்களில் 6 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்

இதில் சுமார் 1,50,000 மாணவர்கள் Neet தேர்வு எழுதுகிறார்கள்

இவர்களில் 75,000 மட்டுமே தகுதி நிலையை அடைகிறார்கள்


தமிழகத்திலுள்ள 74 மருதுவ கல்லூரிகளில் சுமார் 10,000 MBBS இடங்களும்

சுமார் 3000 BDS இடங்களே உள்ளன


மருத்துவ துறையில் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற ஆர்வம் இருத்தாலும்

யதார்த்த நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் துவண்டு விடாமல்

மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற முயலவேண்டும்.


மற்ற 60,000 மாணவர்களும் துவண்டு விடாமல் மறு முயற்சி பலிக்கும் வரை

வாளாவிருக்காமல்  சென்னையில் உள்ள 

BSB HEALTH CARE நிறுவனத்தை அணுகினால்  அடுத்து என்ன செய்ய 

வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை

இலவசமாக அளிக்க தயாராக இருக்கின்றது.


தமது தமிழகத்தில் 20 க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிபுகள் 

உள்ளன. இதில் 10 முதன்மையான சான்றிதழ் மட்டும் பட்டய பயிற்சிகள்

உள்ளன.







       அவைகள்

  1. Bachelor of Physiotherapy (BPT)

  2. Bachelor of Science in Nursing (BSc Nursing)

  3. Bachelor of Occupational Therapy (BOT)

  4. Bachelor of Pharmacy (BPharm)

  5. Bachelor of Medical Lab Technology (BMLT)

  6. Bachelor of Optometry (BOptom)

  7. Bachelor of Radiation Technology (BRT)

  8. Bachelor of Speech, Language, and Hearing Sciences (BSLHS)

  9. Bachelor of Audiology and Speech-Language Pathology (BASLP)

  10. Diploma in Medical Imaging Technology (DMIT)

  11. Diploma in Operation Theatre Technology (DOTT)

  12. Diploma in Medical Laboratory Technology (DMLT)

  13. Diploma in Dialysis Technology (DDT)

  14. Diploma in X-Ray Technology (DXT)

  15. Diploma in Ophthalmic Technology (DOT)

  16. Diploma in Pharmacy (DPharm)

  17. Diploma in Dental Hygiene (DDH)

  18. Diploma in Dental Mechanics (DDM)

  19. Bachelor of Science in Medical Radiologic Technology (BSc MRT)

  20. Bachelor of Science in Perfusion Technology (BSc Perfusion Technology)


இந்தகைய பயிற்சிகளை  நீட் தேர்வு இன்றி படிக்கலாம் 

பல்வேறு  அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பல்கலை கழகங்களிலும் 

தனியார் நிறுவனங்களிலும் மிக எளிதாக பயின்று 

மருத்துவ துறையினருக்கு இணையாக பணியாற்றி 

பேரும் புகழும் பணமும் பெறலாம்.



  சென்னையில் உள்ள 

 BSB health care 

 நிறுவனம்,

இறுதி தேர்வில் தோல்வி அடைந்த லட்சம் 

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறுகிய கால 

பயிர்சியை வடிவமைத்து அவர்களுக்கும் நம்பிக்கையை ஊட்டி

பகுதி நேர வேலை வாய்ப்பையும் அளித்து அவர்களை மீண்டும்  பள்ளி இறுதி

தேர்வை எதிர் கொள்ள வைத்து தேர்சியை பெற வைத்து பின்னர் 

 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BSC microbiology BSC biochemistry

போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து பயில வைத்து பின்னர் முதுகலை 

படிப்பை முடித்து படிப் படியாக உயர்ந்து முனைவர் பட்டம் பெற்று

இவர்களும் தங்களில் பெயருக்கு முன்னால் DOCTOR என்று போட்டுக்

கொண்டு பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.என்கின்ற நிலைப்பாட்டை கொள்கையாக வைத்திருக்கின்றது


                 இதைத்தான் எமது நிறுவனம்

 

 BECOME A DOCTOR  WITH OUT NEET 

என் கின்ற வாசகத்தை விளம்பர படுத்தி வருகின்றது.


இந்த குறுகிய கால பயிற்சியை பெறுவதன் மூலம் 6 மாதங்களில்

தொற்றா நேய்களை பற்றியும்  அவைகளை எவ்வாறு பரிசோதித்து 

அறிவது என்பதனை பற்றியும் அதனை எவ்வாறு உணவின் மூலம்

நிவர்த்தி செய்வது என்பதனை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்


ஆபத்து காலங்களிலும் அவசர கால கட்டத்திலும் முறையான 

மருத்துவ உதவி கிடைக்கும் வரை முக்கிய கால கட்டத்தை பயண் படுத்தி

தேவையான முதல் உதவியை அளித்து விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும்


தமிழகத்தில் 17,000 கிராமங்கள் உள்ளன. தமிழக அரசு நிறைவான 

முறையில் பல் வேறு மக்கள் நல திட்டங்களை மிக நல்ல முறையில்

நடத்தி வருகின்றது.


எங்கள் நிறுவனமும் கிராமத்திற்கு ஒரு படித்த தன்னார்வளரை 

தேர்ந்த்தெடுத்து அவர்களுக்கு மிக குறைவான கட்டணத்தில்

பயிற்சி அளித்து மிக குறைந்த கட்டணத்தில்  நகர் புறங்களில்

கிடைக்கின்ற அடிப்படை மருத்துவ பரிசோதனை வசதிகளை

தமிழகத்தின் கடை கோடி தமிழனுக்கு கிடைக்க செய்ய வேண்டும்

என்பதே எங்கள் லட்சியம்.


 





தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் நபர்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளது.

இன்னும் 80 லட்டம் நபர்கள் சோதிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.

இவர்களை பரிசோதிக்க 10,000 நபர்கள் தன்னார்வளர்களாக தேவைபடுகிறார்கள்.

+2 வரை படித்த எவரும் இப்பயிற்சியை பெற்று உடனடி வேலை வாய்ப்பை 

பெறலாம்/








     

  


M.R.BALACHANDRAN   

  BSB HEALTH CARE 

  FOUNDER AND CEO 

  RETD, MEIDCAL LABORATORY TECHNICIANMADRAS 

  MEDICAL COLLEGE 

  GOVT HOSPITAL FOR WOMEN AND CHILDREN

  








        The total population of Tamil Nadu is 8 crores

     Total number of plus two students 8 lacks

     Failed and dropouts around one lakh

     BSB Health care adopts the dropouts and provides

     short-term online course 

  என்னை பற்றி ஒரு சிறுஅறிமுகம்

மருத்துவ கல்லூரிகளிலும் அரசு மருத்துவ மணைகளிலும் 40 ஆண்டு கால அனுபவம்

உள்ளவன்.



வியாழன், 23 ஏப்ரல், 2026

உமிழ் நீரில் உள்ள கிருமிநாசினிகள்

*வாய் வறட்சியை போக்கும் உமிழ்நீர் சுரப்பின் தூண்டி* 

வாய் வறட்சி Xerostomia என்பது உமிழ்நீர் தேவையை விட குறைவாக சுரப்பதால் அல்லது சுரக்காமல் போவதால் வரும் ஈரத்தன்மை அற்ற நிலையைத் தான் குறிக்கிறது. இது ஒரு நோய் அல்ல, ஆனால் நமது பழக்கவழக்கத் தவறுகள் அல்லது வழக்கமான நடைமுறை பிழையால் ஏற்படும் குறைபாடு. வாயில் ஈரத்தை அதிகரிக்க, நமது வழக்கமான நடைமுறையை சிறிது மாற்றுவதன் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய முடியும். 

வாயில் ஈரத்தன்மை குறையும் போது வரும் பிரச்சனைகள் சில
மிக முக்கியமாக செரிமான குறைபாடு 
*வாய்துர்நாற்றம்* 
பிசுபிசுப்பான கோழையுடன் *ஓட்டும் தன்மையுடன் உள்ள வாய்* 
*தொண்டை புண்* 
*உணவை விழுங்குவதில் சிரமம்* 
தொடர்ச்சியாக *பேச இயலாமை* அல்லது பேசினால் தொண்டை வலிப்பது 
வாயில் *புஞ்சை தொற்று* 
மற்றும் பல

பொதுவாக இந்த வாய் வறட்சி நவீன மருத்துவர்களின் பக்கவிளைவுகளாலேயே அதிகம் வருகிறது. முக்கியமாக புற்று நோய்க்கு தரப்படும் ஹீமோதெரபி, மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், அலர்ஜி / ஒவ்வோராமைக்கான மருந்துகள், இரத்த அழுத்த மருந்துகள், சிறுநீர் வெளியேற்றும் மருந்துகள் நீண்ட நாட்கள் பயன்பாட்டின் போது இந்த வாய் வறட்சியை உருவாக்குகின்றன. அதே நேரம் புகைபிடித்தல், அதிகப்படியான ஆல்கஹால், அதிக சிக்கரி கலந்த காபி குடித்தல், வாய்வழியே அதிகமாக சுவாசிக்கும் பழக்கம், போதைப்பொருளை அடிமையாதல் போன்ற சில பழக்கவழக்கங்கள் கூட இந்த வாய் வறட்சியை உண்டாக்குகின்றன. இவை அனைத்தும் உமிழ்நீர் சுரப்பின் அளவை குறைக்கிறது அல்லது உமிழ்நீரின் தன்மையை பாதிக்கிறது. வாய் வறட்சி உமிழ்நீர் சுரப்பு குறைவதால் உருவாகிறது. சில நேரங்களில் இந்த உமிழ்நீரில் உள்ள நீரின் அளவு குறைவதால் அதாவது உமிழ்நீரின் அடர்த்தி அதிகமாவதால் வாய் வறட்சி உருவாகிறது. 

நமது ஐம்புலன்களும் இந்த உமிழ்நீரை தூண்டும். முக்கியமாக பசி எடுக்கும் போது நாம் பார்க்கும் உணவு, அதன் வாசனை முதல் உணவைத்த தொடும்போது, அதை பற்றி கேட்க்கும் போது வரை நமது சிந்தனை உணவை நோக்கி இருக்கும் போதெல்லாம் உமிழ்நீர் சுரப்பி தூண்டப்பட்டு உமிழ்நீர் வெளிப்படும். அதாவது நாம் உண்ணப்போகும் உணவை ஜீரணிப்பதர்க்காக நமது வாய் தயாராகிறது என்று அர்த்தம். அதே உணவு வாய்க்குள் வந்த உடன் அதன் சுவையை பொறுத்து உமிழ்நீர் வெவ்வேறு வேதிப்பொருள் கூட்டுடன் சுரக்கும். உணவின் சுவையை வைத்தே அதில் உணவில் உள்ள மூலக்கூறுகளை உணர்ந்து அதனை ஜீரணிக்கத்தக்க வகையிலான என்ஸைம்களைக் கொண்ட உமிழ்நீர் சுரக்கிறது. 

உணவு உண்ணும் போது என்சைம்களுடனான உமிழ்நீர் கட்டாயமாக தேவைப்படும். அதேநேரம் உணவு உண்ணாத போது அல்லது பசி அடங்கிய அல்லது பசி இல்லாத போது இந்த என்சைம்களின் தேவை இல்லை. ஆனால் என்சைம்கள் தேவை இல்லாவிட்டாலும் அப்போதும் வாய் உலராமல் இருக்க ஈரப்பதம் நிறைந்த குறைந்தபட்ச உமிழ்நீர் கண்டிப்பாக தேவை. அப்போது நாம் குடிக்கும் நீர் தற்காலிகமாக வேண்டுமானால் சிறிது நேரத்திற்கு ஈரப்பதத்தை பராமரிக்கும். நம் தூங்கும் நேரம் உட்பட 24 x 7 மணிநேரமும்  வாய் உலராமல் இருக்கும் அளவிற்கு குறைந்த பட்சம் இந்த உமிழ்நீர் சுரந்தே ஆகவேண்டும்.

உணவில்லாத போது சுரக்கும் உமிழ்நீரில் வாயை ஈரமாக வைத்துக்கொள்வது முதல் சில கிருமிநாசினிகள், இரைப்பையில் ஜீரணமாகாமல் இருக்கும் உணவின் தன்மையை பொறுத்து என்ஸைம்களையும் சேர்த்து சுரப்பது  வரை இருக்கும். எனவே தான் நாம் விழுங்காமல் பல்லில் ஒட்டி அதிக நேரம் வாயில் இருக்கும் உணவுத் துகள்கள் கெட்டுப்போவதால் ஏற்படும் கிருமி பரவலை தடுப்பதற்காக காலை பல்துலக்குவது நமது பழக்கமாக உள்ளது. இன்னும் சிலர் இரவு படுக்கும் முன்பும் பல்துலக்குவது உண்டு. அது வாயில் தங்கி இருக்கும் தேவையற்ற உணவுத் துகள்களை நீக்குவதன் மூலம் நீண்ட நேரம் உணவு பயன்பாடில்லாமல் இருக்கும் வாயில் கிருமிகள் அதிகரிக்காமல் இருக்க வழிவகுக்கும். தினமும் இருமுறை பல்துலக்குவது நலம்.  தினமும் காலை பல்துலக்குவது என்பது கட்டாயம். 

நமது முன்னோர்கள் அந்த காலத்தில் பிரஷ் போல பயன்படுத்திய *வேலங்குச்சி, வேப்பங்குச்சி முதல் ஆழ விழுது* வரை கிருமிநாசினியாகவும் அதில் தொட்டு தேய்த்த *உப்பு முதல் கடுக்காய் பொடி* வரை உமிழ்நீர் சுரப்பின் தூண்டியாகவும் இருந்ததால் தான் அவர்களுக்கு ஜீரண கோளாறு முதல் பல்லின் அதிக வாழ்நாள் வரை சாத்தியமானது. தெரிந்தோ தெரியாமலோ நமது முன்னோர்கள் அனுபவ அடிப்படையில் பயன்படுத்தி பலனடைந்து பொருட்களைக்கொண்டு கிருமிநாசினி முதல் ஜீரணத்தை அடிப்படையான உமிழ்நீரை சுரக்கத்தூண்டும் இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொற்பொடியை பயன்படுத்திடுவது தான் புத்திசாலித்தனம். இந்த பதிவில் நாம் பல் பொடிக்கான எந்தெந்த சேர்மானங்கள் சிறந்த உமிழ்நீர் தூண்டியாக செயல்படுகிறது என்பது பார்ப்போம். 

*அதிமதுரம் / Licorice* 
அதிமதுரத்தில் இருக்கும் glycyrrhizin என்ற இயற்கைப்பொருள் உமிழ்நீர் சுரப்பைத்தூண்டி அது தன்னிச்சையாக நீண்ட நேரம் உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது. Glycyrrhizin அதன் இனிப்புத்தன்மையால் சுவை உணர்வு மூலம் நேரடியாக உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது. இது வாயில் உள்ள வீக்கத்திற்கு மருந்தாகவும் சிறந்த கிருமிநாசினையாகவும் செயல்படுகிறது. 

*சுக்கு / Dry Ginger*
இஞ்சியில் முக்கியமாக உள்ள gingerols shogaols மற்றும் Oleoresins என்ற இயற்கைப் பொருட்கள்  உமிழ்நீர் சுரப்பை தூண்ட்டுகின்றன. Gingerols உமிழ்நீரைத் தூண்டுவதற்கு உதவும் ஒரு முக்கிய காரமான ஒரு இயற்கை இரசாயனம். Shogaols இஞ்சியை விட சுக்கில் தான் அதிகமாக இருக்கும். இதுவும் உமிழ்நீரைத் தூண்டுவதற்கு உதவும் ஒரு முக்கிய காரமான ஒரு இயற்கை இரசாயனம் தான். லேசான கசப்பு கலந்த காரமான சுவை கொண்ட Oleoresins  நரம்பு மண்டலத்தின் மூலமாக உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது.

*காசுக்கட்டி / Catechu* 
காசுக்கட்டியில் ஏராளமான உமிழ்நீர் சுரப்பை தூண்டும் வேதிப்பொருட்கள் உள்ளன. அதில் முக்கியமானது Catechin . இந்த Catechin ஒருபுறம் உமிழ்நீர் சுரப்பை தோன்றுகிறது மறுபுறம் அந்த சுரப்பை கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. உமிழ்நீர் சுரப்பின் செல்கள் அதன் காலம் முடிந்த அழியும் போது வேகமாக புதிய சுரப்பு செல்கள் உருவாக இந்த Catechin உதவுகிறது.

*கிராம்பு / Clove* 
கிராம்பில் உள்ள உமிநீர் சுரப்பை தூண்டும் முக்கியமான இயற்கை இரசாயனம் Eugenol என்ற எளிதாக ஆவியாகும் எண்ணெய். Eugenol சுவாசத்தின் மூலமாக நரம்பு மண்டலத்தின் மூலம் உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது. அதன் நறுமண, ஆவியாகும் தன்மை காரணமாக, eugenol சளி சவ்வுகளில் விரைவாக ஊடுருவி, வாயில் உள்ள உணர்ச்சி நரம்பு விளிம்புகளைத் தூண்டுகிறது, இது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்க உமிழ்நீர் சுரப்பிகளுக்கு தூண்டுகிறது. 

*பாக்கு / Areca Nut (Betel nut)* 
பாக்கில் உள்ள Arecoline என்ற இயற்கை பொருள் சிறந்த உமிழ்நீர் சுரப்பின் தூண்டியாக செயல்படுகிறது. Muscarinic Receptor என்ற நரம்பு மண்டல தூண்டுதல் மூலமாக parasympathomimetic agent ஆக முழு உணவுப் பாதையையும் இந்த Arecoline தயார்செய்கிறது. அதன் ஒரு பகுதியாக உமிழ்நீர் சுரப்பையும் தூண்டி அதிக உமிழ்நீரைச் சுரக்கச்செயகிறது. பாக்கை மெல்லும்போது, Arecoline வெளியேறி, வாயில் உள்ள கோழைப்படலம் வழியாக விரைவாக உறிஞ்சப்படுகிறது. Arecoline கோழைச்சுரப்பியில் உள்ள cholinergic axis செயல்பாட்டை தூண்டுகிறது. இது உமிழ்நீரை உற்பத்தி செய்ய உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. Arecoline உமிழ்நீரில் குவிந்து, இரத்தம் மற்றும் உமிழ்நீருக்கு இடையே மீண்டும் சுழற்றப்படும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது வாயில் அதிக செறிவுள்ள உமிழ்நீருக்கு வழிவகுக்கும், அதனால் நீண்ட நேரம் தொடர்ச்சியாக உமிழ்நீர் சுரக்க வழிவகுக்கிறது.

*ஏலக்காய் / Cardamom* 
ஏலக்காயில் உள்ள 1,8-cineole (eucalyptol) மற்றும் -terpinyl acetate போன்ற பல ஆவியாகும் நறுமண எண்ணெய் மூலக்கூறுகளின் கூட்டுச்செயலபாடுகள் தான் ஏலக்காயின் உமிழ்நீர் சுரப்பு தூண்டுதலுக்கு காரணம். ஏலக்காயை மெல்லுவது உமிழ்நீர் pH ஐ கணிசமாக அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது பல் சொத்தையைத் தடுக்கவும், வாய் துர்நாற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.  ஏலக்காயில் உள்ள ஒரு செயல்பாடு மிக்க மூலக்கூறான cineole ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது, இது துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொல்லும். 

*கடுக்காய் / Haritaki* 
கடுக்காயில் நீரில் கரையக்கூடிய டானின்கள், குறிப்பாக செபுலிக் அமிலம், செபுலினிக் அமிலம், செபுலாஜிக் அமிலம், கொரிலாஜின் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த தாவர இரசாயனங்கள் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கும்,  செரிமான வேகத்தை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் மற்றும் இரைப்பை குடல் நிலைமைகளை நிர்வகித்தல் மூலம்மும் உமிழ்நீர் சுரப்பை மறைமுகமாக அதிகரிக்கிறது. இருப்பினும் இது முதன்மையாக வேகமான செரிமானத்திற்காகவும் மற்றும் வாய்வுத் தொல்லை நிவாரணியாகவும் தான் செயல்படுகிறது. கடுக்காய் சில கிருமிநாசினிகளை உமிழ்நீருடன் சேர்த்து சுரக்கத் தூண்டுவதால் வாய்ப்புண் மற்றும் பல் ஈறு வீக்கம் சிகிச்சைக்காக கடுக்காய் பொடி அடிக்கடி வாய் கொப்பளிக்கும் நீரில் சேர்க்கப்படுகிறது, 

*சாதாரண உப்பு / Normal Salt* 
உப்பு தன்மையே அதன் அதீத அரிப்பு குணத்தால் அதனை நீர்த்துப்போக செய்வதற்காக உமிழ்நீரை அதிகமாக சுரக்கச் செய்யும். இருப்பதிலேயே சாதாரண உப்பு தான் சிறந்த உமிழ்நீர் சுரப்புத் தூண்டி. அது மட்டுமல்லாமல் உப்பு ஒரு சிறந்த கிருமி நாசினி. சாதாரண உப்பு முதன்மையாக சுவையூட்டும் தூண்டுதலின் மூலம் இயற்கையான உமிழ்நீர் சுரப்பு தூண்டியாக செயல்படுகிறது. சுவை மொட்டுகளின் தூண்டுதல், குறிப்பாக உப்பு சுவை ஏற்பிகளைத் தூண்டுகிறது. உப்பு வாயில் வைக்கப்படும் போது நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, இது அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட அயனிகளின் சுரப்பை அதிகரிக்க உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. 

இது போன்று பல உமிழ்நீர் தூண்டிகள் இயற்கையில் உள்ளன. அவற்றை முறையாக தயாரித்து சரியான விகிதத்தில் கலந்து பல் தேய்க்கும் போது பெரும்பாலான நமது பல், வாய் மற்றும் ஜீரணப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. ஒரு பற்பொடியில் மூன்று செயல்பாட்டுக்கான சிறந்த இயற்கைப்பொருட்கள் முக்கியமாக இருக்க வேண்டும். *1. சிறந்த உமிழ்நீர் சுரப்பு தூண்டி, 2. கிருமிநாசினி மற்றும் 3. செரிமான தூண்டி.*  

வாய் வறட்சியை நீக்குவதில் பற்பொடியின் பணிக்கு மிக முக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் தூங்கும் போது உமிழ்நீர் சுரப்பு பெரிய அளவில் செயல்படாததால் காலை வாய் வறட்சி அதிகமாக இருக்கும். அதை சரி செய்ய உமிழ்நீர் சுரப்பை தூண்டும் பொருள் கலந்த பற்பொடியை பயன்படுத்துவது மிக முக்கியம். ஒரு சிலருக்கு வாய் வறட்சி இயல்பாகவே அதிகமாக இருக்கும். மேலும் சில குறைபாடு அல்லது நோய் காரணமாக குறைவாக நீர் அருந்த வேண்டிய மருத்துவ நிலை அல்லது இயல்பாகவே உடலில் இருந்து அதிக நீர் வெளியேறும் நிலை இருக்கலாம். அது போன்றோருக்கு பெரும்பாலும் வாய் வறட்சியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அவர்கள் அதிக வீரியம் கொண்ட உமிழ்நீர் சுரப்பு தூண்டி இருக்கும் பற்பொடியை இரவு படுக்கப்போகும் முன் பயன்படுத்தினால் வாய் வறட்சியின் அடுத்த நிலையான *உதடு வெடிப்பு முதல் பல் ஈறில் இரத்த கசிவு* வரை செல்வதை தவிர்க்கலாம்.

Price Details
BIXO-DENT KK - 50 gm - ₹ 90
BIXO-DENT Neem - 50 gm - ₹ 40
+ Courier Charges ₹ 50 within Tamil Nadu and ₹ 100 for out of Tamil Nadu

புதன், 25 மார்ச், 2026

The main reason for the Hemoglobin technique

 மிக்க நன்றி..

நான் என்னுடைய மிகவும் துல்லியமாக என் கண்டுபிடிப்பை கண்டறிந்தேன்.
மிகவும் துல்லியமாகவும், முன்னேற்படாகவும்,
ஒரு ஹமோகிலோபின் instrument ஐ கண்டுபிடித்துள்ளேன்.
ஒரு துளி இரத்தத்தில் இருந்து மிக மிக மிக துள்ளியமாக இரத்தத்தில்
சரியாக கண்டுபிடித்து விட்டேன்.
இனி ஒரு துளி தான் தேவை.
ஒரு சிறு துளி எடுத்து, அதன் மூலமாக
துள்ளியமாக எந்த அளவு hemoglobin உள்ளது எனவும் அதன் மூலமாக எவ்வாறு இரத்த hemoglobin அளவை மிக மிக சரியாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
மிக மிக துள்ளியமாக நம் உடம்பில் எந்த அளவு 14.0 grams/dl உள்ளது எனவே எந்த அளவு இருக்கவேண்டும் எனவும் தெரிந்து கொள்ள முடியும்.
நமது உடம்பில் 9.0 grams /dl
இருந்தால் 4.0 grams/dl எவ்வாறு உயர்த்துதுவது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
நம் உடம்பில்
8.0 grams / dl இருந்தால்
5.0 grams / dl ஐ எவ்வாறு என்பதை உணவு மற்றும் உணவுப்பொருள்களை கொண்டு எவ்வாறு உயர்த்துவது எவ்வாறு தெரிந்து கொள்வது எப்படி என்பதனையும் நீங்கள் தெரிந்து முடியும்.
நம் உடம்பில் 8.0 grams/dl இருந்தால் மிக மிக துல்லியமாக, உணவு மற்றும் மிகவும் துல்லியமாகவும் குறிப்பிட்ட மருந்துகள் மூலமாகவும் குறிப்பிட்ட
மேல்பரிசோதனை மூலமாகவும்
( Comple Haemogram,
With Peripheal Smear study,
Thalasemia,
Sickle Cell Disease ) போன்றவற்றையும் செய்து பார்த்து பின்னர்
முடிவுசெய்யலாம்.
இதற்கு 20 mico லிட்டர் blood எடுத்து ஒரு சிறு quvertte உடன் எடுத்து ஒரு தொலைபேசி கருவியை எடுத்து நம்முடைய இந்த கருவியை இணைத்து இதன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் தங்கள் விருப்பத்தை தெரிய எமக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி
பாலசந்திரன்
9940581843

The main source of the Hemoglobin in your body

 what is the main  

மிக்க நன்றி..
நான் என்னுடைய மிகவும் துல்லியமாக என் கண்டுபிடிப்பை கண்டறிந்தேன்.
மிகவும் துல்லியமாகவும், முன்னேற்படாகவும்,
ஒரு ஹமோகிலோபின் instrument ஐ கண்டுபிடித்துள்ளேன்.
ஒரு துளி இரத்தத்தில் இருந்து மிக மிக மிக துள்ளியமாக இரத்தத்தில்
சரியாக கண்டுபிடித்து விட்டேன்.
இனி ஒரு துளி தான் தேவை.
ஒரு சிறு துளி எடுத்து, அதன் மூலமாக
துள்ளியமாக எந்த அளவு hemoglobin உள்ளது எனவும் அதன் மூலமாக எவ்வாறு இரத்த hemoglobin அளவை மிக மிக சரியாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
மிக மிக துள்ளியமாக நம் உடம்பில் எந்த அளவு 14.0 grams/dl உள்ளது எனவே எந்த அளவு இருக்கவேண்டும் எனவும் தெரிந்து கொள்ள முடியும்.
நமது உடம்பில் 9.0 grams /dl
இருந்தால் 4.0 grams/dl எவ்வாறு உயர்த்துதுவது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
நம் உடம்பில்
8.0 grams / dl இருந்தால்
5.0 grams / dl ஐ எவ்வாறு என்பதை உணவு மற்றும் உணவுப்பொருள்களை கொண்டு எவ்வாறு உயர்த்துவது எவ்வாறு தெரிந்து கொள்வது எப்படி என்பதனையும் நீங்கள் தெரிந்து முடியும்.
நம் உடம்பில் 8.0 grams/dl இருந்தால் மிக மிக துல்லியமாக, உணவு மற்றும் மிகவும் துல்லியமாகவும் குறிப்பிட்ட மருந்துகள் மூலமாகவும் குறிப்பிட்ட
மேல்பரிசோதனை மூலமாகவும்
( Comple Haemogram,
With Peripheal Smear study,
Thalasemia,
Sickle Cell Disease ) போன்றவற்றையும் செய்து பார்த்து பின்னர்
முடிவுசெய்யலாம்.
இதற்கு 20 mico லிட்டர் blood எடுத்து ஒரு சிறு quvertte உடன் எடுத்து ஒரு தொலைபேசி கருவியை எடுத்து நம்முடைய இந்த கருவியை இணைத்து இதன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் தங்கள் விருப்பத்தை தெரிய எமக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி
பாலசந்திரன்
9940581843

சனி, 17 ஜனவரி, 2026

வணக்கம்

எனது 40 ஆண்டு கால அனுபவத்திற்கு பிறகு, நான்  எனது மருத்துவ பயிற்சிக்கு பிறகு நான் பெற்ற அனுபவத்திற்கு   எனக்கு தோன்றிய ஒரு கருத்தை  இங்கு தெரிவிக்கின்றேன்.

தற்போது 8 லட்சம்  மக்களுக்கு சர்க்கரை நோய்க்கு அடிமையாகி உள்ளனர்.

இன்னும் 8 லட்சம்  நபர்களுக்கு சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டி இருக்கின்றது.

நான் இப்போது   PHLEBOTOMIST . என்கின்ற ஒரு வார்த்தைக்கு இங்கு ஒரு அனுபானமாக கூறுகின்றேன்.

விரல் மூலமாக இரத்ததை எடுத்து அதன் மூலமாக எவ்வாரு பரிசோதனை      களை எவ்வாறு செய்வது என்பதனை கூற போகின்றேன்.                                        

விரல் மூலமாக இரத்த எடுத்த இரத்ததில் இருந்து எவ்வாறு இரத்த சர்க்கரையை எவ்வாறு சரி செய்வது என்று எப்படி சரிசெய்வது  என்று  தற்போது சொல்ல போகின்றேன்.

THE LANCET   என்கிற வார்தைக்கு விரல் மூலமாக இரத்தத்தை எடுத்து எவ்வாறு சர்க்கரையின் அளவை எவ்வாறு சரி செய்வது என்பதை கூறபோகின்றேன்.

முதல்  இரு விரல்களை எடுத்து மற்ற விரல்களில் இருத்து எடுக்கப் போகின்றேன்.  ஏன் எனில் அவை இரண்டும்    DOMINANT     விரல்கள்..

                                மற்ற விரல்கள் இருத்து எடுக்கலாம்.

முதலில் சர்க்கரையின் அளவை எடுக்க  ஒரு சிறு துணியில் இருத்து       ALCOHAL   எடுத்து  துடைத்து கொள்ள வேண்டும்.

பிறகு  நாம் கொடுத்து இருக்கிற கருவியை பயன் படுத்தி ஒரு சிறு துளி   இரத்தத்தை எடுத்து , அதன் ஒரு துளியை துடைத்து பின்னர் இந்த கருவியை எடுத்து அதன் அளவை சரிபார்க்க வேண்டும்.

 GLUCOMETER  என்கிற அந்த கருவியை வைத்து அந்த அளவை சரிபார்க்க வேண்டும்.

                               

                               80  லிருது 100 வரை இருக்கலாம்.

                              100 லிருது 180 வரை இருக்கலாம்

200 க்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு சராசரிக்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு அதிக மாக உள்ளது என அறியலாம்.

எனவே இது மிகவும் சரியான அளவு . 

இதை போலவே இரத்ததில் இருத்து

HAEMOGLOBIN

BLEEDING TIME 

CLOTTING TIME

BLOOD GROUPING

URINE FOR COMPLETE ANALYSIS  

போன்ற பரிசோதனிகளை மட்டும் அறிய முடியும்.


இதனை நான் மிகவும்  சரியானது  என்பதனை மிகவும்  சரி யாக கூறுகிறேன்.















































Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...