என்னை ஏற்றி விட்ட ஏணி படிகள்
ஆதித்யாயம் 9
1980
ஸ்டான்லி மருத்துவ மனை யிலிருந்து transfer order பெற்றுக்கொண்டு எழும்பூர் மருத்துவமனைக்கு வந்த போது என்னக்கு ஒரு சோதனை . அந்த மருத்துவமனை AO என்னை பனி யில் அனுமதிக்க தடையாக இருந்தார்.
இங்கே வேலை காலி இல்லை எனக்கு இன்னும் ஆர்டர் வரவில்லை மாலை வரை காத்திருந்தேன் .மறு நாள் சனி ஞாயிறு. திங்களன்று காலை 10 மணிக்கு என்னக்கு சரியான தகவல் தரவில்லை .அந்த வளாகத்தில் உள்ள
biochemisty lab ஐ அணுகி விவரத்தை கூறினேன் .ஸ்டான்லியில் பணி புரிந்த திரு கருணாநிதி மற்றும் திரு நடராஜன் ஆகிய இருவரும் அங்கே biochemist ஆக இருந்தனர் .அவர்களது வழி காட்டுதலின் படி நேராக DME அலுவலகம் சென்று மதிய நேர் காணலின் போது அப்போது DME ஆக இருந்த Doctor ரவீந்திரநாத் அவர்களை சந்தித்து முறையிட்டேன். எங்கள் ஊர் காரர்மேலும் கிங் நிலையத்தில் அதிகாரியாக பணி பற்றியவரின் தந்தையும் ஆவார். .
அவர் AO விற்கு போன் செய்து காரணத்தை வினவினார் .
அவர் எனக்கு ஆபீஸ் காப்பி வரவில்லை என்று காரணத்தைக் கூறினார் .அதற்க்கு அவர்கள் இந்த காப்பியை OC ஆக வைத்துக்கொண்டு என்னை அனுமதிக்குமாறு கூறினார் .
இதற்கான காரணம் அப்போது மினிஸ்டரில் ஸ்டாப் ஆக பணியில் உள்ளவர்கள் லேப் supervisor ஆக பணியில் பதவி உயர்வு பெற்று வந்தார்கள்.
இந்த இரு போஸ்டிங் விவரம் தெரியாமல் அவர் அலுவலகத்திலுள்ள ஒரு எழுத்தருக்கு உதவ நினைத்திருப்பார் என எண்ணுகிறேன் .
இங்கே பனி புரிந்த 37 ஆண்டு காலமும் எனக்கு ஒரு பல்கலை கழகமாக பல நுட்பங்களை கற்று அதனை தற்போது மற்றவர்களுக்கு ஊடகம் வாயிலாக அளித்து வருகிறேன் .
ஏற்கனவே பயோ கெமிஸ்டரி பிரிவில் போதிய அனுபவம் இருந்ததால்
பெத்தோலஜி பிரிவில் விரும்பி இணைந்தேன் .
திரு வைத்தியநாதன் அவர்கள் TA ஆக இருந்தார்கள் .
இவர் ஓர் ஆல்ரவுண்டர் பல நுட்பங்களை அவரிடம் கற்று கொண்டேன் .
திரு ராஜமாணிக்கம் அவர்கள் அங்கே MALE FROG TEST ஐ செய்துவந்தார் ஏற்கனவே எனக்கு அனுபவம் இருந்ததால் அவருக்கு உதவியாக இருந்தேன் .
திரு லட்சுமிபதி அவர்கள் section cutting ல் வல்லவர் எனக்கு op சீட்டில் case history படித்து அறிவதில் இருந்து lab requstion படித்து ரிப்போர்ட் தட்டச்சு செய்வது வரை பயிறுவித்தார் .
திரு ராமசந்திரன் அவர்கள் ஸ்பெசிமென் கட்டிங் அண்ட் ஸ்டைனிங் ல் வல்லவர் .ஒரே முறையில் cervix endo cervix ecto- cervix & endometrium அதனை ஒரே slide ல் வைத்து ஸ்டைனிங் செய்து அசத்துவார்
இவரே BUCKAL SMEAR STUDY என்ற பரிசோதனையை செய்து வந்தார் என்னுடைய வேலை SPECIMEN RECEPTION ஆக இருந்தாலும் அவருக்கு உதவியாக இருந்தேன்
TEST PROCEDURE
பயனாளியை நீரில் வாயை கொப்பளிக்க செய்து WOODEN SPATULA மூலம் கன்னத்தின் உட்பக்கம் cheek பகுதில் scrap செய்து slide ல் தடவி air fix செய்து பின்னர் hematoxilin & Eosin செய்து உடன் ஒரு peripheral smear செய்து அதனை leishmanstain ல் stain செய்து ரிப்போர்ட்க்கு பேராசிரியரிடம் வைக்கவேண்டும் .
blood smear ஐ stain செய்வது என் பொறுப்பில் விடப்பட்டது. நான் Prof ..VCB அவர்களின் குறிப்பிலிருந்து கற்றுக்கொண்ட 0.30% leishman Stain என்ற ஒன்றை BDH கம்பெனி தயாரிப்பான dye ஐ பயன்படுத்தி stain செய்து காட்டினேன் .இது leukocytosis , infectuas mononuleuosis , leukemic போன்றவைகளை stain செய்யும் போது மிக நன்றாக வரும் . இது பின்னாளில் எனக்கு நான் விரும்பிய கிளினிகல் ஹெமடோலஜி பிரிவில் வேலை பெற உதவியது .
திரு நடராஜன் அவர்கள் specimen reception பகுதியில் பொறுப்பாளராக இருந்தார். அவர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து அவர் section cutting பிரிவுக்கு சென்று விட்டார் . ஒரு பெரிய அறை முழுவதும் தரையில் specimen கள் நிறைந்து, உள்ளே இருக்க இயலாத வகையில் formalin நெடி இருந்தது
.சுமார் 1000 specimen கள் இறைந்து கிடந்தன .
pathologist மறுபரிசோதனைக்காக கேட்கும் பொது மிக சிரமப்பட்டு தேட வேண்டும். இங்கே நான் சற்று சிந்தித்து பெரிய ஜார்கள் 10 எடுத்து 100 வருட பழமையான borosil கண்ணாடியில் ஜெர்மனி நாட்டு தயாரிப்பு கனமான மூடியுடன் இருக்கும் .
கிங் நிலையத்தில் நான் கற்றுக்கொண்ட Glass ware solution ஐ தயார் செய்து potassium Di chromate உடன் அடர் கந்தக அமிலத்தை கலந்து தயாரிக்க வேண்டும்.புத்தம் புது ஜார் போல தயார் செய்தேன் .
PR NO 1 முதல் 100 வரை முதல் ஜாரிலும்
PR NO 101 முதல் 200 வரை இரண்டாவது ஜாரிலும்
மொத்தம் 10 ஜார்களில் 1000 specimen களை அடைத்துவிட்டேன் .
சிறிய bottle ல் வரும் specimen களை ஒரு tray களில் எண் வாரியாக Steel Rack ல் அடுக்கி விட்டேன்.பேராசிரியர் கேட்ட உடன் 5 நிமிடங்களில் அவரது மேஜை மீது வைத்து விடுவேன் .
இதற்க்கு எனக்கு உதவியாக இருந்த திரு கோவிந்தராஜ்
திரு மாலகொண்டய்யா மாற்றும் மருத்துவமனை சுகாதார பணியாளர் களுக்கும் என் நன்றியை இப்போதும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறையை நன்றாக LYSOL ஊற்றி கழுவி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து
Aether spray செய்து போர்மலின் நெடியை குறைத்தேன் .
மறு நாள் ஊதுபத்தி ஏற்றி அந்த அறையை மணக்க செய்தேன் .
.
ஒய்வு பெற்ற பின்பும் VCB அவர்கள் அடிக்கடி அவர் உருவாக்கிய IOG என்கின்ற ஆய்வககத்திற்கென தனி கட்டிடத்தை பார்வை இட வருவார் .அவ்வாறு வரும் போது போது specimen room ஐ பார்த்து வியந்து என்னை அழைத்து பாராட்டினார்
நினைவுகள் தொடரும் ........
இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை என் வலை தளத்தில் google form ல் பதிவு இடவும் .பதிவுக்களுக்கு நினைவு பரிசு உண்டு
https://site.srivaritech.com /bsb
wa.me /c /919940581843
buy directly a good microscope from amazon use this link
<iframe sandbox="allow-popups allow-scripts allow-modals allow-forms allow-same-origin" style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=IN&source=ss&ref=as_ss_li_til&ad_type=product_link&tracking_id=bsbhealthca0f-21&language=en_IN&marketplace=amazon®ion=IN&placement=B07GT1LSGZ&asins=B07GT1LSGZ&linkId=15064234cac0d94d00a8f8a33384419a&show_border=true&link_opens_in_new_window=true"></iframe>