ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பாரம்பரியத்தை மீட்ப்போம்


 அத்தியாயம் 2

நண்பர்களுக்கு வணக்கம் சென்ற பதிவில் நாம் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்த பற்பசைகளை பற்றியும் பிரஸ் வகைகளை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

பிளாஸ்டிக்கில் உள்ள கேடுகளை பற்றி தெரிந்து கொண்டோம்.

 மேலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை கலந்த பற்பொடிகளை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

 மூன்று நாட்களுக்கான இலவச பற்பொடியைப் பெற விண்ணப்பிக்க எங்கள் எண்ணையும் கொடுத்திருக்கிறோம்.

wa.me/c/919940581843

இன்று மேலும் ஒரு தகவலாக ஒரு தேக்கரண்டி ( 5 ml ) நல்ல எண்ணெயை பயன்படுத்தி வாய் மூலமாக ஐந்து நிமிடங்கள் கொப்பளிப்பதன் மூலம்                  (oil pulling ) என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வோம். 


இந்த காணொளியை கண்டு பின் தொடருவோம்

https://youtu.be/l7W6TGaCWSI?si=oddEhT2N_rQOBKFi

இதைத் தான் நம் முன்னோர்கள் வைத்தியனுக்கு தருவதை வாணியனுக்கு கொடு என்று கூறி சென்றுள்ளார்கள்.

காலையில் எழுந்தவுடன் நீரில் வாயை கொப்பளித்து விட்டு பிறகு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை வாயில் விட்டு ஐந்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வாயை நன்றாக கொப்பளிப்பதன் மூலம் இந்த தேங்காய் எண்ணெய் நம்மளுடைய வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ் நீர் சுரப்பிகளை தூண்டி அதில் உள்ள அடைப்புகளை நீக்கி அதிக அளவு உமிழ் நீரை சுரக்க வைக்கும் இந்த உமிழ் நீரில் உள்ள சில ரசாயனங்கள் எண்ணெயில் உள்ள கொழுப்புடன் சேர்ந்து sappanification என்கிற இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி  இயற்கையான சோப்பினை தயாரித்து அதன் மூலமாக வாய்,பற்கள், தொண்டை, மூக்கின் பின்புறம், காது மற்றும் வாயை இணைக்கும் குழாய் ஆகிய இடங்களில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும்.

இதனால் வாய் வழியாக தொற்றை ஏற்படுத்தக்கூடிய பல விதமான நோய்க்கிருமிகளை இங்கேயே அழித்து விடும் சோப்பு போட்டு கையை கழுவினால் corona போற்ற பெரிய கிருமிகளை கூட அகற்றும் என்பதை சென்ற ஆண்டுகளில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதைத்தான் நம் முன்னோர்கள் 

கூழ் ஆனாலும் குளித்துகுடி

கந்தையானாலும் கசக்கி கட்டு            

என்று ஒரு சென்றுள்ளார்கள்.

ஆய்வுக்கூட தொழில்நுட்பத்தில் சில அனுபவங்களை பெற்றுள்ளதால் சில மருத்துவ உண்மைகளை உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

முதற்கட்டமாக இதன்மூலம் வாயில் உள்ள உமிழ் நீரின் சிறப்புகள். உமிழ் நீரில் amylase ptyalin என்கிற இரண்டு நொதிகள் உள்ளன. இவை நாம் உண்ணும் உணவில் உள்ள சக்கரை சத்துக்களை எளிய சர்க்கையாக மாற்றி இரைப்பைக்கு தள்ளுகின்றன. இதனால் இரைப்பைக்கு உணவை ஜீரணிப்பதில் பாதி சிரமத்தை உமிழ்நீர் குறைக்கின்றது. 

இதைத்தான் நம் முன்னோர்கள் நொறுங்க தின்றால் நூறு வயது என்று கூறி சென்றுள்ளார்கள்.

எனவே நாம் அனைவரும் உணவு உண்ணும் போது கவலம் கவலமாக வாயில் இட்டு இரண்டு அல்லது மூன்று முறை மென்று பின்னர் மெதுவாக விழுங்க வேண்டும் உணவு உண்ணும் போது பேசிக்கொண்டும் கைபேசியை பார்த்துக் கொண்டோம் இருக்கக் கூடாது.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

 அதிக அளவு உமிழ் நீரை சுரப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஜீரணத்தில் பாதியை வாயிலேயே முடித்து விடும் உமிழ் நீரில் உள்ள நொதிகள் சக்கரையை உடைத்து எளிய சர்க்கரையாக உள்ளே அனுப்பும். இதனால் தேவையான அளவு மட்டும் இன்சுலின் சுரந்து அதிக அளவு மாவு சத்தினை குளுக்கோஸ் ஆக மாற்றி செல்லுக்குள் செலுத்தும் இதனால் ஆயுள் முழுவதும் இன்சுலின் தடையின்றி கிடைக்க வழி கோலும்.

சாதாரணமாக தொண்டையில் streptococci staphylococcus போன்ற நுண் கிருமிகள் இருக்கும் இவை சுரக்கும் சில நொதிகள் (exotoxin )தான் பிற்காலங்களில் இதய வால்வுகளையும் மூட்டு தசைகளையும் பாதிக்கின்றது. oil pulling அதன் மூலம் இக்கிருமிகள் மிக எளிதாக அழிக்கப்படுகின்றன.

இதனை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முன்பும் பின்பும் throat swab test ஐ நுண்ணுயிர் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து நீங்களே அறிந்து கொள்ளலாம்.

உடம்பிற்கு தலையே பிரதானம் அந்த தலையில் வாய் மூலமாகத்தான் பல நோய்க்கிருமிகள் உள் நுழைகின்றன இவைகளை முன்னரே தடுத்து நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமும் பெறுவோம்.

வாழ்க வளமுடன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...