நண்பர்களுக்கு வணக்கம் என்னை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஒரு அத்தியாயத்திலும் ஒரு நான் அறிந்த நுணுக்கத்தை கற்றுவிக்க ஆசைப்படுகிறேன் நீங்கள் அதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
அரசு மருத்துவமனையில் பணி புரியும்போது transfer அண்ட் போஸ்டிங் என்ற முறையில் அரசாணையை பயன்படுத்தி மற்ற இரு நண்பர்களும் கண் மருத்துவமனையில் வேலையை பெற்று விட்டார்கள்.
இந்த விவரம் தற்போது தற்காலிக அரசு பணியில் பணி புரிபவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
வேலை இழந்த மறுநாளே அப்பொழுது இயக்குனராக இருந்த F.S.Phillips அவர்கள் சிபாரிசின் படி சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் ஆய்வுக்கூடத்தில் பணி நான் வாங்கிய அரசு சம்பலத்திலேயே கிடைத்தது.
கிங் நிலையத்தில் ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு மைக்ரோஸ்கோப் நால்வருக்கு ஒரு centrifuge அனைவருக்கும் ஒரு colorimeter அதநையும் biochemist தான் இயக்குவார்.
ஶ்ரீ ராம கிருஷ்ண மடத்தில் சிபாரிசு இருந்தபோதிலும் தலைமை மருத்துவர் ஸ்டான்லி 1963 ல் RMO ஆக இருந்த Dr KAK என்னை interview செய்தார். கேள்விகள் எதனையும் கேட்காமல் கேட்காமல் பெரிய இடத்திலிருந்து சிபாரிசு உடன் வந்திருக்கிறாய் , நீயே பிளட் கலெக்ட் செய்து சுகர் டெஸ்ட் செய்து காண்பி என்று கூறிவிட்டார். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நபருக்கு எளிதில் அழகாக ரத்தம் எடுத்து வைத்து விட்டேன். அவர் எதிரில் அந்த பரிசோதனைக்கு தேவையான மூன்று டெஸ்ட் tube இரண்டு pipette இவைகளை எடுத்துச் சென்று அதனை கழுவி காய வைத்து விட்டு ஐயா இது காய்ந்த பிறகு தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினேன் சரி பரிசோதனை செய்து ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு என்னுடைய டேபிளுக்கு வா என்று சென்று விட்டார். இந்த கால அவகாசத்தில் கலோரி மீட்டர் அருகில் சென்று அதை எவ்வாறு ஆன் செய்வது என்பதில் திணறிவிட்டேன் இந்த பயிற்சி எனக்கு கிங் நிலையத்தில் கிடைக்கவில்லை என்றாலும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் போதும் கிடைக்கவில்லை என்பதாலும் அங்கே திணறி விட்டேன். ஆனால் all ways use clean and dry glasswares என்ற பயிற்சி அங்கே உதவியது. நான் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது முதலில் மின்சாரம் சரியாக வருகிறதா பின்னர் விசையை அழுத்தியவுடன் மின் தொடர்பு கருவிக்கு கிடைத்ததா என்பதிலிருந்து படிப்படியாக மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தேன்.
சுமார் மூன்றாண்டுகள் மொத்த ஆய்வகதையும் இயக்கி நிலையான வருமானத்தை நிர்வாகத்திற்கு அளித்தேன். மடத்தின் நிர்வாகத்தில் இருந்த பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று blood group முகாம்களின் மூலம் செய்து அளித்தேன்.
1974 ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள். அப்போது Dr.KAK அவர்கள் டீன் prof.Aswathaman எனக்கு பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் வேலைவாய்ப்பு அளித்தார்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக