புதன், 26 ஜூலை, 2023

என்னை ஏற்றி விட்ட ஏணிப்படிகள் அத்தியாயம் 5

 1973 

சென்ற அத்தியாயத்தில் கூறியபடி AFB பற்றி எனக்கு பயிற்றுவித்ததை 

 நேர்முக தேர்வின் போது சரியாக கூறியதால் சிபாரிசு  இல்லாமல்  வேலை கிடைத்து

விட்டது அதேபோல அவர்கள் அளித்த கட்டளையை ஏற்றுக் கொண்டதால் மருத்துவமனை

இயக்குனர், ஆய்வுக்கூட இயக்குனர் [ பெத்தாலஜிஸ்ட்] ஆகிய இருவருடைய அன்பையும்

பெற்றென்.

 காலை ஏழு முதல் ஒரு மணி வரை என்றாலும் பத்து மணிக்கு எல்லாம்

எங்களது பணி முடிவு அடைந்து விடும் பேரரிழர்

அண்ணாவின் மைந்தர் மருத்துவர்  பரிமளம் அவர்கள் அனுமதியோடு

மெயின் லேபுக்கு சென்று அங்கு பெத்தாலஜி பிரிவில் என்னுடைய

சீனியர் பெருமாள்

அவர்களிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்

 அதேபோல இன்றைய தலைமுறைகளுக்கு தெரிந்திருக்காத பரிசோதனை 

      male frog test    ஆண் தவளையில் உடலில் கருவுற்றிருக்கும் பெண்களின் சிறுநீரை செலுத்தி

பின்னர் அந்த தவளையின் சிறுநீரை எடுத்து மைக்ரோஸ்கோபின் மூலமாக  பார்த்து

அந்தப் பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதை உறுதி செய்வோம் இன்று

இந்த பரிசோதனை மிகவும் எளிதாகி  விட்டது.


 அங்கு எனக்கு பணி அங்கிருந்த சீனியர் கிரேட் 1 பயிற்சிக்கு செல்ல வேண்டி

இருந்ததால் எங்களுக்கு 10 a 1  என்ற அரசாணைப்படி ஒராண்டுகாலத்திற்கு வேலை

 [ரூபாய் 350 சம்பளம் ]கிடைத்தது.

 இங்கு ஒரு நிகழ்ச்சியில் பதிவிட விரும்புகிறேன் எனது  சீனியர் போகும்போது

தம்பி நீங்கள் வேலைக்குபுதுசு எனவெ பழய  ரிப்போர்ட் எல்லாம் பாரு அதுல

நான் ரெட் கலரில் positive போட்டு இருந்தா அப்படியே positive என்று போடு  நெகட்டிவ்னு

போட்டு இருந்தா நெகட்டிவ் போட்டுவிடு என்று கூறி சென்றார்.

 மொத்தம் பத்து அல்லது 20 sputum  பரிசோதனைகள் தான் வரும் அதனை முறைப்படி

செய்து அரை மணி நேரத்தில் அனைத்தையும் பரிசோதித்து possitive slide கலையெல்லாம்

முறையாக லேபிலிங் செய்து தனியாக எடுத்து வைத்து விட்டேன்.

ஒரு மூன்று மாத காலம் நல்லபடியாக சென்றது. இயக்குனர் அலுவலகத்தில் இருந்து

ஒரு அறிவிப்பு சென்றது நாளை பாலச்சந்திரன் அவர்களை விடுமுறை எடுக்காமல்

நாளை  வர வேண்டும் தலைமை அலுவலகத்திலிருந்து மருத்துவ குழு அவரை

காண விரும்புகிறது இயக்குனர் professor K.V.K காசநோய் பிரிவை பார்வையிடவருகிறார்.

.இவர் தன்வந்திரி பட்டம் பெற்ற பேராசிரியர் .K.V THIRUVENGADAM அவர்களின் சகோதரர்.

 எங்கள் ஆய்வகம்  முழுவதும் சலசலப்பு என்னடா செஞ்சு தொலைஞ்ச

என்று அனைவரும் கேட்டார்கள். மருதுவ குழு வந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்து

என்னை உள்ளே அழைத்தார்கள். இந்த பரிசோதனை கோல்டன் டெஸ்ட்

என்பது உனக்கு தெரியுமா சரியாக செய்தாயா என்று கேட்டார்கள் ஏற்கனவே

எனக்கு நல்ல அனுபவம் இருந்ததால் தைரியமாக இதை நான் எல்லாம் சரியாக

செய்திருக்கிறேன் இதுவரையில் நான் சோதித்த அனைத்து சிலைட்களையும்  

பாசிட்டிவ் நெகட்டிவ் என தனித்தனியாக வைத்திருக்கிறேன். தேவையானால் கொண்டுவந்து

காட்டுகிறேன் என்ரேன்.வேண்டாம் தம்பி  சிகிச்சைக்கு பிறகு காச நோய் அனைத்து

இடங்களிலும் கட்டுக்குள்  வந்து விட்டது.  இந்த மருத்துவமனயில் மட்டும் பாசிடிவ் 

கேஸ் குறையவில்லை  இதில் எங்களது அறிஞர் குழு statistic department மண்டைய

உடைந்து கொண்டிருந்தார்கள். மருந்துக்கு அடங்காத MDR TB என்பது அப்பொழுது

உலகை  அச்சுறுத்திக் கொண்டு இருந்தது. இன்று எங்கள் தலைவலி உன்னால் தீர்ந்தது

என்று பாராட்டினார்கள்

பிறகு அதே நண்பர்கள் புது துடப்பம் ஆரம்பத்தில் நல்லா பெருக்கும் என்று பாரட்டினார்கள்


 இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நாம் செய்யும் வேலையில் கவனமாக இருந்தால்

நமக்கு நன்மைகள் தானாக வரும் இந்த பாராட்டு தான் ஓராண்டுக்கு பிறகு அங்கு வேலை

  இழந்த பிறகு இயக்குனர் அவர்கள் சுபாரிசு செய்து என்னை மயிலாப்பூரில்

உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் உடனடியாக எனக்கு வேலை வாங்கி கொடுத்தார்.

 அரசு சம்பளத்திற்கு இணையான சம்பளத்தை எனக்கு அங்கு கொடுத்தார்கள்

அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில்…… 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...