திங்கள், 1 ஜனவரி, 2024

மில்லட் உங்களை மில்லியனர் ஆக்கும்


 வாழ்க வளமுடன்

நீக்கமற நிறைந்திருக்கும் சீரிளமைத்திறம் வாய்ந்த தமிழ் அன்னையை வணங்கி இந்த கட்டுரையை எழுதுகிரேன் .

உலக நாடுகளும் மத்திய அரசும் மாநில அரசும் 2023 வது ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கின்றன.

 ராமநாதபுரத்தை சார்ந்த டாக்டர் எஸ் முருகேசன் என்பவர் IOFA என்ற நிறுவனத்தை நிறுவி தரிசு நிலங்களை கூட எளிதாக அதிக தண்ணீர் தேவை          இன்றி விளையும் சிறுதானியங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து அதனை அவர்களிடமிருந்து பெற்று மதிப்பு கூட்டி மக்களுக்கு MS international என்ற நிறுவனத்தின் வாயிலாக உடனடியாக சமைத்து உண்ணும் வகையில் துணை உணவுப் பொருள்களை உருவாக்கி அளித்து வருகிறார்.

இவர் கோவை விவசாய கல்லூரியில் விவசாய பட்டபபடிப்பு முடித்து மத்திய அரசில் அரசில் முக்கிய பதவியில் வகித்து மத்திய அரசு வழங்கும் மானியங்களைப் பெற்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்த்தவர். 

இவர் ராமநாதபுரத்தை சார்ந்தவர் என்பதால் அங்குள்ள நீர் மேலாண்மை கருதி பணிவரகு, வரகு, கம்பு , திணை சாமை, வாலி போன்ற சிறுதானியங்களை பெரும் அளவில் விவசாயம் செய்து மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்.

இவர் சிறுதானியங்களில் உள்ள மருத்துவ குணங்களை ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டம் பெற்று தமிழக மக்களுக்கும் மற்ற மக்களுக்கும் பேருதவிகளை செய்து வருகிறார்.

இவருடன் இணைந்து BSB healthcare என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்ற                திரு lion பாலச்சந்தர் அவர்கள் சிறுதானியங்களின் மூலம் எவ்வாறுதொற்றாநோய்களான 

உடன் பருமன் 

ரத்தசோகை

சர்க்கரை நோய்

 உயர் இரத்த அழுத்தம்

 சில வகை புற்று நோய்கள் ஆகியவற்றை எவ்வாறு கண்டறிந்து அவற்றுக்கு உணவின் மூலமாகவே எவ்வாறு தீர்வு தருவது என்பதை சிறு பயிற்சியாக அளித்து வருகிறார்.

இன்றைய தலைமுறையினருக்கு அவரவர் இல்லத்தில் பாட்டி,தாத்தா போன்ற உறவுகளுடன் வாழ கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு இல்லத்திலும் அனுபவமுள்ள முதியோர் இருந்தால் அவர்கள் சிறுதானியங்களில் பயன்பாட்டை நமக்கு தினமும் கிடைக்கும் வகையில் செய்திருப்பார்கள் இருப்பார்கள் தமிழகத்தில் பெயர் பெற்ற                        பாட்டி வைத்தியம் , கை வைத்தியம்      என்ற ஒன்று இன்று மறைத்து போய் இருக்காது. ஐந்தரைப்பெட்டி  என்ற ஒன்று நம் சமையல் அறையில் இருந்து காணாமல் போய்விட்டது 

இத்தகைய பாரம்பரியத்தை மீட்டு எடுப்பதற்காக முயற்சியை டாக்டர் முருகேசன் அவர்களும் பாலச்சந்திரன் அவர்களும் சில சிறிய திட்டத்தை வகுத்து அதனை தமிழகமெங்கும் கொண்டு செல்ல இருக்கிறார்கள்.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 களில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது சிறுதானியங்களும் மரவள்ளிக்கிழங்கும் நமது தேவையை பூர்த்தி செய்து வந்தன. அப்போது ஏற்பட்ட 

தொழிற்பெயர்ச்சி 

பசுமைப் புரட்சி 

வெண்மை புரட்சி  போன்றவற்ரால்        ஐஆர் 8 போன்ற கலப்பின அரிசி பெருமளவில் பயிரிடப்பட்டது அதிக மகசூல் தரும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக முழுவதும் பயிரிடப்பட்டன.

வட இந்தியாவில் கோதுமையை அதிகமாக பயிரிட்டார்கள்.  இந்த அரிசியும்  கோதுமையும் தான் இன்றைக்கு நமது இந்தியாவை உலக அளவிலே அதிக சர்க்கரை நோய் உள்ளவர்களாக உயர்தி காட்டி இருக்கிறது.

எனவே நாம் அனைவரும் சற்று சிந்தித்து சிறுதானியங்களை மீண்டும் நம் பயன்பாட்டிற்குள் கொண்டுவர எங்களோடு இணைந்து சமுதாய பணியாற்ற          பிளஸ் டூ படித்த மாணவர்களையும் விவசாயிகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 1955 இல் நான் உத்திரமேரூர் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தேன் .           என் தந்தை M.P. ராமச்சந்திரன் என்பவர் திரைப்பட த்துறையில் வேலை வாய்ப்பை நாடி  சென்னை வடபழனிக்கு இடம்பெயர்ந்தோம். அவரது முதல் படம் நாடோடி மன்னன் என்ற படத்தை புரட்சித்தலைவர் உடன் பணியாற்றிய வாய்ப்பு பெற்றார்.

இங்கே ஏன் நான் புரட்சித்தலைவர் அவர்களை மேற்கோள் காட்டுகிறேன் என்றால் அவர் அவரது உணவில் கேழ்வரகு கலியாகவும் தகுதியாகவோ தினமும் எடுத்துக் கொண்டார் சிறுதானிய பாயாசத்தை தினமும் அவர் தாயாரின் படத்தில் படைத்து வந்து போவோர் அனைவருக்கும் அதை வழங்கினார் அவரது உடல் உறுதிக்கு சிறுதானியங்கள் தான் ஒரு காரணம் என்பதை நான் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன் எட்டாம் வகுப்பு வரை எம்ஜிஆர் பள்ளியிலும் உயர்நிலை கல்வியை ஏவிஎம் அவிழ்ச்சி பள்ளிகளும் புது புத்தக வகுப்பு ல லாலா கல்லூரியிலும் படித்து பின்னர் மருத்துவத்துறையில் மீது உள்ள ஆர்வம் காரணமாக சென்னை கிண்டியில் உள்ள தென்நிலையத்தில் மருத்துவ ஆய்வக பயிற்சியை பெற்றேன் அங்கே மனித மாத்திரைகளை பரிசோதிப்பது மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களை பரிசோதிக்கும் நாம் தினமும் அருந்தும் தண்ணீரை பரிசோதிக்கும் மாற்றம் அனாலிசிஸ் பதிவும் ஆங்கில மருந்துகளை ஆய்வு செய்யும் என்பதால் அந்த பிரிவுகளில் சென்று பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன் அங்கு தான் சிறுதானியங்களில் மதிப்பு எனக்கு அறிய நேரிட்டது அங்கே அவர்கள் வளர்த்து வரும் எலி முயல் ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு சிறுதானியங்களை மாகாளிப்பார்கள் குறிப்பாக எலிகளின் இனப்பெருக்கம் மூக்கு கடலை வேர்க்கடலை போன்றவற்றை உணவாக பெற்றதால் கிடைத்தது என்பதை அறிந்தோம்.

அங்கே உள்ள உணவு பகுப்பாய் உலகத்தில் ஆய்வகத்தில் நாம் உண்ணும் உணவில் புரதோஷத்தை எவ்வளவு உள்ளது மாவு சத்து எவ்வளவு உள்ளது நார்சத்து எவ்வளவு உள்ளது உன்னதகாதது ஏதாவது கலப்படமாக உள்ளதா என்பதை பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

ஆண்டுகளில் நான் பெற்ற இந்த பயிற்சியை தற்போது 90 நாட்களில் சிறக குறைத்து ஒரு பயிற்சியாக தமிழக மக்களுக்கு அளிக்கவிருக்கின்றேன்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தொற்ற நோய்களுக்கான பகுப்பாய்வுகளை இந்தியா முழுவதும் அமைக்கவிருக்கிறது அதன் வாயிலாக சிறுதானியங்களின் மருத்துவ குணங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க இருக்கின்றது

எங்கள் எங்கள் நிறுவனம் தமிழகத்தில் சுமார் 10,000 பயிற்சி மையங்களை விரைவில் உருவாக்க இருக்கின்றது குறிப்பாக மருத்துவ வசதியற்ற கிராமங்களிலும் மலை கிராமங்களிலும் அமைக்க இருக்கிறோம் அங்கே வசிக்கும் பிளஸ் டூ படித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

இத்தகைய சிறிய ஆய்வகங்கள்மூலம் உடல் பருமன் ரத்த சோகை ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், கருத்தரிக்க இயலாமை புற்றுநோய் போன்றவற்றை எவ்வாறு எளிதாக கண்டுபிடித்து அதற்கான தீர்வை உணவின் மூலமாகவே எவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதை தமிழக மக்களுக்கு அளிக்க இருக்கிறோம்.


சனி, 14 அக்டோபர், 2023



                                                     ஒம் அகத்தியாய நமஹ




 எல்லாம் வல்ல இறைவனை வணங்கி இந்த கட்டுரையை உங்களுக்கு

 எம் எஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்  வழங்குகின்றது.


 குருவே சரணம்.


 எனது ஆத்மார்த்த குரு பரம்ஜோதி அவர்களின் ஆசியுடன் தொடர்கிறேன்.



இறைவன் சூரியனிலிருந்து சந்திரனையும்,  பூமியையும் , செவ்வாயையும் படைத்தான்.  


 இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. .


 பூமியில் மட்டும் உயிரினங்கள் தோன்றின..


 உயிரினங்கள் யாவும் இனப்பெருக்கத்திற்காகவே இறைவனால் படைக்கப்பட்டவை.


 பூமியில் ஒரு செல் உயிரினங்கள் தமக்குத் தாமே பிரிந்து இனப்பெருக்கத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன


 பாலூட்டிகள் அனைத்தும்  இயற்கையாகவே இனப்பெருக்கத்தை செய்து வருகின்றன.

 இதில் மனிதர்கள் மட்டுமே தவறான வாழ்க்கை முறையினால் குழந்தையின்மை என்ற நிலைக்கு இன்றைய சூழ்நிலைகளில்  தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.


 18 சித்தர்களின் முதன்மையானவர் போகர்.

 போகரின் வழிவந்த  அகத்திய மாமுனிவர் இமயமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்து பல நூல்களை தந்து அருளி  இருக்கிறார்.

 அவற்றில் நமக்கு தற்போது தேவைப்படுவது அகத்தியர் வழங்கிய

 கற்ப கோள் எனும் நூலே ஆகும்.



இந்த இருபதாம் நூற்றாண்டில் ஷ்கேன் கருவி மற்றும் பல விஞ்ஞான கருவிகள் துணை கொண்டு நாம் கண்டு உணர்ந்த பல விஷயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அகத்திய மாமுனிவர் தன் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்  உங்கள் பார்வைக்கு சிலவற்றை அளிக்கிறோம்


  அகத்திய மாமுனிவர் குறிப்பிட்டதில் ஆண் மலடு என்று ஒன்று உண்டு 

ஆனால்  பெண் மலடு என்று ஒன்று இல்லை  என்று ஆணித்தரமாக குறிப்பிட்டு இருக்கிறார்.


 மேலும் பெண் மலடு ஆறுவகை என்று வகைப்படுத்தி இருக்கிறார்

சதை மலடு,

ரத்த மலடு ,

புழு மலடு.

வாயு மலடு………



இவைகளே ஆங்கிலத்தில்


PCOD, 

hemaroid cyst,

dermoid cyst,

trichomonas, moniliasis,

fibroid uterus

endometriosis என  பல விஷயங்களுக்கு விஞ்ஞான முறையில் காரணங்களை தற்போது நாம்  கண்டறிந்து உள்ளோம். 


ஒரு பயிர் உருவாக தேர்ந்தெடுத்த விதைகளும் நேர்த்தியான மண் வளமும் சாதகமான சீதோஷ்ண நிலையும் அவசியம்.


 அதைப்போல ஆண்களுக்கு விந்தணுக்கள் மிக அவசியம்.

 பெண்களுக்கு Endometriosis என்கின்ற ஒரு காரனத்தை தவிர  மற்ற காரணங்களை நவீன சிகிச்சை முறைகளால் நமது பாரம்பரிய சித்தர்கள் அருளிய முறைகளின் படி மற்ற காரணங்களை எளிதில் நிவர்த்தி செய்து விடலாம்.


 ஆணின் விந்துவில்  அணுக்கள் இல்லாத நிலை உள்ள ஆண்கள் ஜாதகப்படி அவர்களது ஏழாவது பிறவியை நிறைவு செய்து உள்ளார்கள் என மறைமுகமாக அறிந்து அவர்கள் ஸ்வீகாரம் என்ற முறையில் தத்து எடுத்து கொள்ளலாம்  


மற்ற அனைவரும்  MS internatinal நிறுவனம் மற்றும்  bsb healthcare  நிறுவனத்தின்

Astro medical infertilty center  வாயிலாக மிக எளிய பாரம்பரிய சிகிச்சை முறைகளை கையாண்டு  90 நாட்களில் நீங்களும் புத்திர பாக்கியம் பெற்று

 இறைவனால் படைக்கப்பட்ட நம் கடமையை தொடர எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.


What is in fertility 


திருமணம் ஆகி  முறையான உடல் உறவு  முறையான நேரத்தில் இருந்தும்  இரண்டு ஆண்டுகள்  கடந்த பின்னும் குழந்தை பிறக்கவில்லை என்றால் தாமதம் செய்யாமல் அருகில் உள்ள மகப்பேறு பெண் மருத்துவரை அணுகவும் ஆண்கள் androlgy  மருத்துவரை  அணுகவும்.


குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலோர் ஐடி துறையில் இணைந்து 

 பணியாற்றுவதால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் அனுபவித்து வாழ்கிறார்கள்

 இதனால் அவர்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் வாயிலாக கிடைக்கக்கூடிய பல மறைமுக விஷயங்களை கிடைக்க பெறாததாலும்  விட்டமின் டி மற்றும் பி 12 போன்ற உயர் சத்துக்கள் குறைவதாலும்  பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் இருப்பதாலும், 

அங்கே ஒவ்வொருவருக்குஏற்படுத்த படுகின்ற மன அழுத்தம் காரனகாகவும்,

அங்கே வினியோகிக்கப்ப்டும் துரித உணவு

மற்றும் அளிக்கப்படும் குளிர் பானங்களாலும் 

பலரும் குழந்தை இன்மை என்ற  நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்

இதற்கு சான்று இன்றைக்கு ஊருக்கு நான்கு செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன என்பதே சாட்சி.


அதிக பண வசதி இல்லாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் கடந்த கால மருத்துவ சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு உங்களுடைய ஜாதகம் இருந்தால் அதனையும் எடுத்துக்கொண்டு அல்லது உங்கள் பிறந்தநாள் பிறந்த ஊர் நேரம் ஆகிய விவரங்களுடன் எங்கள் நிறுவனத்தை அணுகி இலவசமாக ஆலோசனையை பெறுங்கள்.


 நவீன கருவிகளின் துணைகொண்டும் நமது பாரம்பரிய சித்த மருத்துவ அறிவுரைகளிலன் படியும் 90 நாட்களில் நீங்கள் அதிக  பொருட் செலவு இன்றி நீங்களும் பெற்றோர்களாகலாம். எங்கள் நிறுவனதிற்கு நீங்கள்  சிகிச்சைக்கு பின்பு உங்கள் கரு நிலைத்தது என்று அறிந்த பிறகு பணத்தை செலுத்தினால் போதும்.


 இந்த மூன்று மாத காலங்களில் மகப்பேறு உறுதி செய்யப்படவில்லை என்றால் பின்னர் நீங்கள் நவீன சிகிச்சைக்கு செல்லலாம்.


மேலும் விவரங்களுக்கு



Lion M. R. Balachandran 

Founder and CEO

Bsb health care 

Astro medical infertility research center

99405 81843

                                                      https://bsbhealthcare.my.canva.site

Register your details in

                                                    https://labbala.wixsite.com/website-1





Dr. S. Murugesan
 Founder and CEO

M S International 

9444781692



தற்பொழுது BSB ஹெல்த் கேர் நிறுவனம்  மிக நவீன சிகிச்சை முறையினை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது கீழே காணும் வலைதளத்தை உள்ள காணொளிகளை கண்ட பிறகு எங்களை அழைத்து மேல் விவரங்களை அறிந்து கொள்ளவும்.

www.subhag.in


                                               seekira santhana prapthi rastithu



புதன், 27 செப்டம்பர், 2023

Oral hygene வாய் சுத்தம்



 வாழ்க வளமுடன் அதிகாலையில் எழுந்து முதல் கடமையாக வாய் கொப்பளித்து பல் துலக்குதல் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த நெறி.

இந்த நூற்றாண்டில் நாம் நாகரீகம் என்ற பெயரில் நம் பாரம்பரிய அனுபவ முறைகளை மறந்து விட்டோம்.

BSB healthcare நிறுவனம் அதனை மீட்டு உங்களுக்கு தர ஆவலாக உள்ளது.

சித்த மருத்துவத்தில் oil pulling பற்றி  பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதன் பலன்கள் அளப்பரியவை.

இந்த வாய் சுத்தப்படுத்தும் முறையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இந்த(9940581843) whatsapp எண்ணிற்கு வேண்டுகோள் விடுக்கவும்.

தினம் தோறும் ஆயில் புல்லிங் செய்வதால் பல் ,அண்ணம், ஈறு , உள்நாக்கு, வாயையும் இனைக்கும் பகுதி Orophaynx,மூக்கையும் வாயையும் இணைக்கும் பகுதி, nasopharynx வாயையும் காதையும் இணைக்கும் குழாய் eustachian tube போன்ற இடங்களில் என்னை பசையை ஏற்படுத்தி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

மேலும் விவரங்களை youtube வாயிலாக வீடியோக்களாக பார்த்து தெரிந்து கொள்ள இனைப்பை பெற இந்த  9940581843 எண்ணிற்கு whatsapp செய்யவும்.

கூடுமானவரை  Brush & paste களை தவிர்க்கவும் .

காலையில் இனிப்பான சுவையை நாவிற்கு அளிப்பதால் அது மண்ணீரலைத் தூண்டி இன்சுலினை வீணாக சுரக்க வைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது உகந்தது அல்ல.

தவிர்க்க இயலாத நிலையில் மூங்கில் brush, ஹிமாலயா , vanjrathanthi ,ஆயுஷ் போன்ற நிறுவனங்களின் மூலிகை பேஸ்ட்டுகளை சிறிதளவு பயன்படுத்துங்கள்.

அதிக நுரையை தரும் சில ரசாயனங்கள் இதில் உள்ளதால் இது உங்களுக்கு பிற்காலத்தில் கேடு விளைவிக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் நம் தாத்தா பாட்டி போன்றவர்கள் எந்த  பல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய விஷயங்களை இன்று உங்கள் போஸ்டில் உப்பு இருக்கிறதா? என்று விளம்பரப் படுத்துகிறார்கள்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, வேப்பங்குச்சி நல்லது போன்ற விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை            பற்பொடிகளை வாங்கி பயன்படுத்தலாம்.

எமது நிறுவனம் அறிமுகப்படுத்தும் மூலிகை பற்பொடியில் என்ன என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலும் வேலும் வேம்பும் சிறப்பு மருத்துவ குணங்களை கொண்டது என்றாலும் எங்களது மூலப் பொருள்கள் 100 வருட வயது உள்ள மரங்களில் இருந்து பெறப்படுகிறது.

ஆலம் விழுதுகளை பற்றி மேலும் சில அறிய விஷயங்களை கீழே அளித்துள்ளோம்.

*ஆலவிழுது*

ஆலமரத்தின் தாவரவியல் பெயர் :*Ficus benghalensis*

ஆலமரம், இது நமது இந்திய தேசிய மரம். பனியாஸ் என்ற மரத்தின் கீழ் இந்து வியாபாரிகள் வியாபாரம் செய்ததால் ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயர்களால் BANYAN என்று பெயர் சூட்டப்பட்டது. 

கங்கை, இமயமலை மற்றும் ஆலமரம் ஆகிய மூன்றும் இந்தியாவின் உருவங்களை அடையாளப்படுத்துகின்றன, எனவே இது தேசிய மரமாக கருதப்படுகிறது.

ஆலமரம், அதன் கிளைகள் பெரிய பரப்பில் புதிய மரங்களைப் போல வேரூன்றி நிற்கின்றன. வேர்கள் பின்னர் அதிக தண்டுகள் மற்றும் கிளைகளை உருவாக்குகின்றன. இந்த பண்பு மற்றும் அதன் நீண்ட ஆயுட்காலம் காரணமாக, இந்த மரம் அழியாததாக கருதப்படுகிறது மற்றும் இந்தியாவின் புராணங்கள் இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்த தொன்மையான இந்திய மரம் இது.

மண்ணில் ஊன்றிய ஆலமர விழுதுகள் மரத்திற்கு தூண்கள் போன்று ஆதாரத்தைத் தருகிறது. அவை கனமான கிளைகள் மற்றும் தண்டுகளுக்கு முட்டு கொடுத்து சாய்ந்து விடாமல் பாதுகாப்பதால் தான் ஆலமரங்கள் வயது அதிகமாக உள்ளது. பொதுவாக வேர்கள் மண்ணுக்குள் தான் முளைத்து மண்ணை ஊடுருவி வளரும். ஆலமர விழுதுகள் சற்று வித்தியாசமாக கிளைகளில் இருந்து நிலத்தை நோக்கி அந்தத்தில் வளர்ந்து வரும். அவை மண்ணைத்  தொட்டதும் மண்னுக்குள் ஊடுருவி வழக்கமான வேர்கள் போல செயல்படும். கிளையில் இருந்து மண் வரை உள்ள பகுதி அதன் வாரிசு மரத்தின் தண்டு பகுதியாக உருவெடுக்கும்.

ஆலமரத்தின் வேர் ஒரு சிறந்த கிருமிநாசினி. Lactobacillus மற்றும் Streptococcus ஆகியவை பல் சிதைவு மற்றும் ஈறு கோளாறுகளுக்கு முக்கிய காரணமான பாக்டீரியாக்கள். ஆலமரத்தின் வேர்ச் சாறு, மேற்கூறிய இரண்டும் உட்பட பல பாக்டீரியா இனங்களுக்கு எதிராக முதன்மையான பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாட்டைக் காட்டுகிறது. 

ஆலவிழுதுகளை எடுத்து மெல்லுவதால் ஈறு நோய், பல் சிதைவு மற்றும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படாமல் தடுக்கிறது. ஆலவிழுதுகள் இயற்கையான பற்பசையாக செயல்படுவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்க உதவுகிறது. மேலும் பற்களை வலுவாக்கும். வேர் குச்சியில் இருந்து சுரக்கும் astringent மற்றும் nbsp போன்ற வேதிப்பொருட்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தப்படுத்தி பலப்படுத்துகிறது. 

ஆலவிழுதுகளின் சாறு செல்களிலும் கிருமிகள் மீதும் செயல்படும் நோய் எதிர்ப்பு சுரப்புகளைத் தூண்டி அவற்றை அழிக்கிறது. ஆன்டிஜென் அல்லது நோய்க்கான நோயெதிர்ப்புக்கான சுரப்புகளை செய்யும் நிணநீர்க்கலங்களை இது தூண்டுகிறது. எனவே ஆலவிழுதுகளின் சாறு, எய்ட்ஸ் நோயின் ஒட்டுமொத்த நிர்வாகத்தில் எச்ஐவி எதிர்ப்பு மருந்துகளுடன் இணைந்து நோயெதிர்ப்பு அடிப்படையிலான சிகிச்சையாக மேலும் ஆராச்சி செய்யப்பட்டு வருகிறது. அது எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை ஓரளவிற்கு நீட்டிக்க முடியும். 

Ref : https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2792505/

ஆலவிழுதின் எத்தனால் சாறுகள், நோய்த்தொற்றிலிருந்து நம்மைத் தடுக்க கீழ்கண்ட நுண்ணுயிரிகள் மீது ஆண்டிபயாடிக் ஆகச் செயல்பட்டு அவற்றை அழிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Pseudomonas aeruginosa

Proteus mirabilis,

Stapylococcus aureus

Bacillus cereus

Alcaligenes

faecalis 

S. typhimorium

and 

Salmonella typhimorium.

Ref : https://citeseerx.ist.psu.edu/viewdoc/download?doi=10.1.1.974.2431&rep=rep1&type=pdf

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளான வேப்பமரம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அமெரிக்கர்கள் காப்புரிமை கொண்டாடியதை கடத்த ஐந்து வருடங்களுக்கு முன்புதான் சட்டபூர்வமாக முறியடித்துள்ளோம்.

 நாம் பன்னெடுங்காலமாக பல் தேய்த்து வரும் ஆலமர விழுதுகள் மீது தற்போது ஐரோப்பியர் மற்றும் அமெரிக்கர்கள் கவனம் சமீப காலமாக திரும்பி உள்ளது. அதன் மீது ஏராளமான ஆராய்ச்சிகள் செய்வதற்கான பதிவுகள் நடந்துள்ளது. நமது பழங்கால அறிஞர்கள் தமிழிலும் (சித்தா) சமஸ்கிருதத்திலும் (ஆயுர்வேதம்) எழுதி வைத்துள்ள பல விஷயங்களை தற்போது அவர்கள் ஆய்விற்காக எடுத்துள்ளனர். 

நாம் ஒருபுறம் தமிழ் பேசுவதையே கௌரவ குறைச்சலாக எண்ணுகிறோம். மறுபுறம் சமஸ்கிருதத்தை அவமானம் செய்து அதை ஒரு சமூகத்தவர் மொழி என்று ஒதுக்குகிறோம். அவற்றை வெளி நாட்டினர் சாதகமாக எடுத்துக்கொண்டு சமஸ்கிருதத்தை விரும்பி படித்து அதன் பல்வேறு அபூர்வ அறிவியல் விஷயங்களை இங்கிருந்து எடுத்து அவர்கள் ஆய்வு முடிவுகளாக காப்புரிமை பெறுகின்றனர். அவை நமது பொக்கிஷங்கள் என்று நிரூபிக்கக்கூட நமக்கு அந்த மொழிகளில் ஆளுமை குறைந்து வருவது வேதனையான விஷயம்.

நாங்கள், *BIXO HERBAL COOKIES* என்ற தயாரிப்பு நிறுவனம் *BIXO-DENT KK* பிராண்ட் பெயரில் ஆலமர விழுதுகளைப் பயன்படுத்தி மேலும் பல முக்கிய மூலிகைகள் சேர்த்து பல் பொடியை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இந்தியர்களாகிய நாம் மேற்கத்திய பற்பசை கலாச்சாரத்திற்கு மாறியது துரதிர்ஷ்டவசமானது. நமது பாரம்பரியத்தை ஓரளவு பாதுகாப்பான அளவிலாவது மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம். 

*BIXO-DENT KK* பற்பொடியில் கலந்துள்ள மற்ற மூலிகைப் பொருள்கள் 

வேலம்பட்டை 

களிப்பாக்கு 

காசுக்கட்டி 

ஏலக்காய் 

கடுக்காய் 

இந்துப்பு 

கிராம்பு 

மிளகு 

தவிடு 

சுக்கு


ஒரு முறை துலக்க அரை கிராம் போதும். இதை வெறும் கையாலோ அல்லது வழக்கமான பிரஷ் கொண்டோ அல்லது விளிம்பு நைத்த வேப்பங்குச்சியோ கொண்டு பல் துலக்கலாம்.

வள்ளலார் அவர்கள் வருந்தியது போல கடைவிரித்தோம் கொள்வார் இல்லை 

என்று இல்லாமல் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஒரிரு நாட்கள் பயன்படுத்தி பார்த்து பலனை அறிந்து வாழ்க வளமுடன்.

Oral higene pack RS.300 only

இல்லத்தில் இருந்தபடியே குரியர் மூலம் பெற wa.me/9940581843 என்ற Online Store மூலமாக ஆர்டர் செய்யவும் அல்லது எங்கள் whatsapp 9949581843 எண்ணில் அழைக்கவும்.



Dr.s. Murugesan. PhD 

Founder CEO of IOFA

MS international.

Retired Central govt officer

National dairy development

National waste water project etc.



Lion M.R. Balachandran

Retired medical laboratory technician

Institute of obstetrics and gynaecology

Madras medical College

9940581843

https://bsbhealthcare.my.canva.site

labbala2@gmail.com.

தமிழகத்தில் உள்ள பிளஸ் டூ தேர்வு பிஎஸ்சி பயிற்று கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் எங்களுடன் இணைந்து எங்களது குறிகிய கால ஆன்லைன் பயிற்சியை பெற்று நாம் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க எங்களுடன் இணைந்து மக்களுக்கு தொண்டாற்ற எண்ணம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.
















ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

மானவர்களே நீங்களும் மில்லியனர் ஆவது எப்படி ?

மானவர்களே  நீங்களும் மில்லியனர் ஆவது எப்படி ?

பாடம் 1

அன்பு மாணவர்களே ! 

பிளஸ் டூ படித்த மாணவர்கள் அனைவரும் உங்கள் பெற்றோருடன் கலந்து ஆலோசித்து அடுத்து என்ன படிக்கலாம் என்பதை தீர்மானியுங்கள் மாணவர்கள்  அனைவருக்கும்  மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

NEET  உதவி  இன்றி அனைவரும் மருத்துவம் சார்ந்த 20க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிப்புகளை ஓரிரு ஆண்டுகளில் பயின்று உடனடியாக வேலை பெற்று பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கலாம் .


தமிழக முதல்வர் மாண்பிமிகு ஸ்டாலின் அவர்கள் ஏழை மாணவர்களுக்காக மாதம் ஆயிரம் ரூபாய்கள் கல்வி உதவி பணமாக அளிக்கின்றார் அதனையே மூலதனமாக  கொண்டு உங்களுக்கான வெற்றி பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

மருத்துவ ஆய்வு கூட நுட்புணர் பயிற்சியில் எனக்கு 50 வருட அனுபவம் உள்ளதால் உங்களுக்கு இந்த  துறையினை பரிந்துரைக்கின்றேன் .படித்த உடன் வேளை வாய்ப்பும் படிக்கும் போதே விடுமுறை நாட்களில் பகுதி நேர வேளை வாய்ப்பின் மூலம்  சம்பாதிக்கவும் இயலும் .

மேல் விவரங்களுக்கு  9940581843 என்ற  எண்ணில் என்னை  பெற்றோர் முன்னிலை யில்  அழைக்கவும் .

உங்களுக்கு ஏற்ற துணை மருத்துவ படிப்பை பரிந்துரை செயகிறேன்

ஏற்கனவே DMLT பயிற்சி முடித்தவர்கள் இந்த பதிவை கண்டவுடன் என்னை தொடர்பு கொள்ளவும் .

முதலில் உங்களுக்கு தேவையான ஓர் இன்றியமையாத ஓர் கருவி கைபேசி வாழ்க்கையில் முதலில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் முக்கியமான விதி சிக்கனம் .ருபாய் 10,000 க்குள் ஒரு நல்ல கை பேசி. 

இந்த கைபேசி ஐ வாங்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ

 https://amzn.to/3s58Vak

பயன் படுத்துங்கள் .உங்கள் வசதிக்கேற்ப மாத தவணையில் வாங்கலாம்

                                                                 https://amzn.to/3QAGtHz

உங்களுக்கு தேவையான மேற் பயிற்சியை இலவசமாக அளித்து உங்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றி காட்டுகிறேன் நீங்கள் வேலை தேடுபவராக இல்லாமல் மற்றவர் களுக்கு  வேளை வாய்ப்பு அளிப்பவராக வாழ்வில் உயருங்கள் .  

FILL UP THIS GOOGLE FROM  https://forms.gle/hyqLoiLoMpQQVA7t8

FOLOW MY BLOGS labbala2.blogspot.com

students click the blue colour links to view the sites

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

என்னை ஏற்றி விட்ட ஏணி படிகள் அத்தியாயம் 10

 என்னை ஏற்றி விட்ட ஏணி படிகள்  அத்தியாயம் 10

 
முன்னர் குறிப்பிட்டபடி  Prof .VCB அவர்கள்  முன்நெடுத்து ஆய்வகத்திற்கென்று தனி கட்டிடம் கட்ட காரணமாக இருந்தார் 
Biochemistry , Pathology ,Microbiology , Library ,Artist , Micro Photographer ,Musium 
Conference hall , Director office என அருமையாக அமைத்தார் .

அங்கே  திரு .சூசைராஜ்  அவர்கள் Artist  cum  micro photographer ஆக பணி மிகவும் திறமை வாய்ந்தவர். அரசு ஓவிய கல்லூரியில்  நடிகர்.சிவகுமாருடன் பயின்றவர் .திருக்குறளுக்கான ஓவியம் ஒன்று வள்ளுவர் கோட்டத்தில் உள்ளது.பெரும்பாலும்  .தமிழகத்தில் ஓரிருவரே அந்த பதவியில் இருந்தனர் முக்கியமான மாதிரிகளை SLR camera மூலம் படம் எடுப்பார் .அவரிடம் microscopic அடாப்டர் இருந்தது .பெரும்பாலும்  கருப்பு வெள்ளை யில் படம் எடுப்பார்.
 
சில முக்கியமான ஸ்லைடுகளை கலரில் தயாரிக்க வேண்டி இருக்கும் 
ஒரு ஸ்லைடு தயாரிக்க Rs 500 ஆகும். 
.மருத்துவ மாணவர்களால் அந்த அளவு செலவு செய்ய இயலாது .
எனக்கு திரைப்பட உலகில் நல்ல தொடர்பு இருந்ததால் என்னுடைய 
தம்பி A .சபாபதி  பிரபல கேமராமேன் ,
என் நண்பன் பாலகிருஷ்ணன்cini  laboratory யில் பணி புரிந்ததாலும் இலவசமாக கலர் பிலிம் கொண்டுவந்து பயிற்சி மருத்துவர்களுக்கு தேவை யான படங்களை உருவாக்கி கொடுத்தோம் இன்று அந்த  மருத்துவர்கள் சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமையாளராக உள்ளனர்.திருமதி ரமணி சிவராமன் ,NSK PADMINI, கமலா செல்வராஜ் ,ஜெயம் கண்ணன்,பாண்டியன் ,ராதா பாண்டியன் ,கோபிநாத் பத்மாவதி கோபிநாத் ,ஸ்ரீதேவி ,NSK பத்மினி ,சிவரஞ்சனி போன்ற பலரின் நன்மதிப்பை பெற்றேன் .

ஜூனியர் technician கள் கட்டாயமாக OP டூட்டி செய்ய வேண்டும் gynaec  op யில் 
TV & Moniliasis பார்க்க வேண்டும்  இங்கே அது வரை எவரும் தராத ஓரு report ஐ அளித்ததேன் .அது Leptothrix என்னும் ஓர் fungai .

பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள எங்கள் வளாகத்திலேயே அமைந்த நூலகம் தான் .கிங் நிலையத்திலும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் நூலகம் இருந்தாலும் அங்கே நுட்புறங்களை அனுமதிக்க மாட்டார்கள் .இங்கே எனக்கு அந்த வசதி கிட்டியது .அங்கே கிடைத்த மாத மருதுவ இதழ்கள் JAMA .ICMR news bulletin,AACC,IFCC போன்ற  இதழ்கள் எனக்கு மிகவும் உதவியது 

வெள்ளை படுத்தல் என்ற நிலையில் இந்த பரிசோதனை மிக்க பலனை தரும்.ஒரு துளி normal saline ஒரு துளி 40% KaOH போதும். அளவு Positive ரிப்போர்ட் தருவதால் எனக்கு பாசிட்டிவ் பாலா என்ற பெயரை பெற்றேன் .

                                                        https://youtu.be/rim2dXF3Oac






antinatel  OP யில் urine  albumin  sugar  மற்றும் tallquist முறையில் ஹீமோகுளோபின் பரிசோதிக்க வேண்டும் .தினம் 100  கர்ப்பிணிகள் வருவார்கள் பல ஆண்டுகளாக சிறுநீரை காய்ச்சிதான் பரிசோதித்தார்கள் 
நான் ஏற்கனவே biochmistry யில் பணி யாற்றி இருந்ததால் 3% sulpho salicylic acid ஐ biochemistry லேபில் பெற்று albumin பரிசோதனை ஐ மிக எளிமையாகவும் துல்லியமாகவும் செய்து தர வழி கோலினேன் .
மிகுந்த சிரமங்களுக்கு பிறகு medical store கீப்பர்களிடம் போராடி urine strip for albumin & sugar op ல் இன்று வரை தொடர்கிறது . 

இந்த எளிய சிறுநீர் பரிசோதனை preeclamsia என்கின்ற நிலையிலுருந்து கர்ப்பிணி பெண் களை பேறு காலத்தில்  காப்பாற்ற உதவும்.

கர்ப்பிணி பெண் களுக்கு இரத்த சோகை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .Anemia complicating Pregnancy என்பது அந்த அளவிற்கு ஆபத்தை விளைவிக்க கூடியது . 

Tallquist முறையில் ஹீமோகுளோபின் அளவை கணக்கிடுவது துல்லியமாக இருக்காது இது எனக்கு திருப்தியை தர வில்லை .எனவே shalis adam முறையில் பரிசோதிக்க ஏற்பாடு செய்தேன் வேலை பளு அதிகமானதல் மற்ற நுட்புனர்களின் கோபத்தை சம்பாதித்து கொண்டேன். 
இந்த முறையில் 100 நபர்களுக்கு பரிசோதனை செய்வது மிகவும் சிறமம் .

எனகிருந்தே .அயல்நாட்டு தொடர்பு மூலம் German  தயரிப்பான hemocheck என்கின்ற WHO வின் ஒப்புதலை பெற்ற ஓர் முறையை அறிமுகப்படுத்தி 
2 gram% முதல்14 gram % வரை மிக துல்லியமாக ஒரே ஒரு ருபாய் செலவில்  
98% துல்லியமாக sever anemia வை கணிக்கலாம் .


மேல் விவரம் தேவைப்படுபவர்கள் 
www .copackservice .de என்ற் வளைத்தை 
பார்ர்வையிடுங்கள் .

இதன் இந்திய தயாரிப்பை வாங்க நினைப்பவர்கள் wa .me /c /919940581843
என்ற என் வாட்சப் செயலியை நாடுங்கள் .

இலவச முகாம் நடத்துவதற்கும் இரத்த வங்கி யில் கொடையாளர்கள
தெரிவு செய்வதற்கும் பள்ளிகளில் வளர் இளம் பெண்களுக்கு இரத்த பரிசோதனை செய்வதற்கும் மின்சாரமில்லாத மலைவாழ் மக்களுக்கு பரிசோசனை செய்வதற்கும் உகந்தது . 

இன்னும் தொடரும் ....... 






.


புதன், 2 ஆகஸ்ட், 2023

என்னை ஏற்றி விட்ட ஏணி படிகள் ஆதித்யாயம் 9

என்னை ஏற்றி விட்ட ஏணி படிகள்  
ஆதித்யாயம் 9

1980   



ஸ்டான்லி மருத்துவ மனை யிலிருந்து  transfer order பெற்றுக்கொண்டு எழும்பூர் மருத்துவமனைக்கு வந்த போது என்னக்கு ஒரு சோதனை . அந்த மருத்துவமனை AO என்னை பனி யில் அனுமதிக்க தடையாக இருந்தார். 
இங்கே வேலை காலி இல்லை எனக்கு இன்னும் ஆர்டர் வரவில்லை மாலை வரை காத்திருந்தேன் .மறு  நாள் சனி ஞாயிறு. திங்களன்று காலை 10 மணிக்கு என்னக்கு சரியான தகவல் தரவில்லை .அந்த வளாகத்தில் உள்ள
biochemisty lab ஐ அணுகி விவரத்தை கூறினேன் .ஸ்டான்லியில்  பணி புரிந்த திரு கருணாநிதி மற்றும் திரு நடராஜன் ஆகிய இருவரும் அங்கே biochemist ஆக இருந்தனர் .அவர்களது வழி காட்டுதலின் படி நேராக DME அலுவலகம் சென்று மதிய நேர் காணலின் போது அப்போது  DME ஆக இருந்த Doctor  ரவீந்திரநாத் அவர்களை சந்தித்து முறையிட்டேன்.  எங்கள் ஊர் காரர்மேலும் கிங் நிலையத்தில் அதிகாரியாக பணி பற்றியவரின் தந்தையும் ஆவார். .
அவர் AO விற்கு போன் செய்து காரணத்தை  வினவினார் .
அவர் எனக்கு ஆபீஸ் காப்பி வரவில்லை என்று காரணத்தைக்  கூறினார் .அதற்க்கு   அவர்கள் இந்த காப்பியை OC ஆக வைத்துக்கொண்டு என்னை அனுமதிக்குமாறு கூறினார் .

இதற்கான  காரணம் அப்போது மினிஸ்டரில் ஸ்டாப் ஆக பணியில் உள்ளவர்கள் லேப் supervisor   ஆக  பணியில் பதவி உயர்வு பெற்று  வந்தார்கள்.
இந்த இரு போஸ்டிங் விவரம் தெரியாமல் அவர் அலுவலகத்திலுள்ள  ஒரு எழுத்தருக்கு  உதவ நினைத்திருப்பார் என எண்ணுகிறேன் .
  

இங்கே பனி புரிந்த 37 ஆண்டு காலமும் எனக்கு  ஒரு பல்கலை கழகமாக பல நுட்பங்களை கற்று அதனை தற்போது மற்றவர்களுக்கு ஊடகம் வாயிலாக அளித்து வருகிறேன் .

ஏற்கனவே பயோ கெமிஸ்டரி  பிரிவில்  போதிய அனுபவம் இருந்ததால் 
பெத்தோலஜி  பிரிவில் விரும்பி இணைந்தேன் .

திரு வைத்தியநாதன் அவர்கள் TA ஆக  இருந்தார்கள் .
இவர் ஓர் ஆல்ரவுண்டர் பல நுட்பங்களை அவரிடம் கற்று கொண்டேன் .

திரு ராஜமாணிக்கம் அவர்கள் அங்கே MALE FROG TEST  ஐ செய்துவந்தார் ஏற்கனவே எனக்கு அனுபவம் இருந்ததால் அவருக்கு உதவியாக இருந்தேன் .

திரு லட்சுமிபதி அவர்கள் section cutting ல் வல்லவர் எனக்கு op  சீட்டில் case history படித்து அறிவதில் இருந்து lab requstion  படித்து ரிப்போர்ட்  தட்டச்சு செய்வது வரை பயிறுவித்தார் .

திரு ராமசந்திரன் அவர்கள் ஸ்பெசிமென் கட்டிங் அண்ட் ஸ்டைனிங் ல் வல்லவர் .ஒரே முறையில் cervix  endo cervix ecto- cervix & endometrium அதனை ஒரே slide ல் வைத்து ஸ்டைனிங் செய்து அசத்துவார் 

இவரே BUCKAL SMEAR STUDY என்ற பரிசோதனையை செய்து வந்தார் என்னுடைய வேலை SPECIMEN  RECEPTION   ஆக இருந்தாலும் அவருக்கு உதவியாக இருந்தேன் 

 TEST PROCEDURE 

பயனாளியை நீரில் வாயை கொப்பளிக்க செய்து WOODEN SPATULA  மூலம் கன்னத்தின் உட்பக்கம் cheek பகுதில் scrap செய்து slide ல் தடவி air fix  செய்து பின்னர் hematoxilin  & Eosin செய்து உடன் ஒரு peripheral smear செய்து அதனை leishmanstain ல் stain செய்து ரிப்போர்ட்க்கு பேராசிரியரிடம் வைக்கவேண்டும் .
blood  smear ஐ  stain செய்வது என் பொறுப்பில் விடப்பட்டது. நான் Prof ..VCB அவர்களின் குறிப்பிலிருந்து கற்றுக்கொண்ட 0.30% leishman  Stain   என்ற ஒன்றை BDH கம்பெனி தயாரிப்பான dye ஐ பயன்படுத்தி stain செய்து  காட்டினேன் .இது leukocytosis , infectuas  mononuleuosis  , leukemic போன்றவைகளை stain செய்யும் போது மிக நன்றாக வரும் . இது பின்னாளில் எனக்கு  நான் விரும்பிய கிளினிகல் ஹெமடோலஜி பிரிவில் வேலை பெற உதவியது . 



திரு நடராஜன் அவர்கள் specimen reception  பகுதியில்  பொறுப்பாளராக இருந்தார். அவர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து அவர் section cutting பிரிவுக்கு சென்று விட்டார் . ஒரு பெரிய  அறை முழுவதும் தரையில்  specimen கள் நிறைந்து, உள்ளே இருக்க இயலாத வகையில் formalin நெடி  இருந்தது
.சுமார் 1000 specimen கள் இறைந்து கிடந்தன .
 
pathologist மறுபரிசோதனைக்காக கேட்கும் பொது மிக சிரமப்பட்டு தேட வேண்டும். இங்கே நான் சற்று சிந்தித்து பெரிய ஜார்கள் 10 எடுத்து  100 வருட பழமையான borosil  கண்ணாடியில் ஜெர்மனி நாட்டு தயாரிப்பு கனமான மூடியுடன் இருக்கும் . 

கிங் நிலையத்தில் நான் கற்றுக்கொண்ட Glass ware solution ஐ தயார் செய்து  potassium Di chromate உடன் அடர் கந்தக அமிலத்தை கலந்து தயாரிக்க வேண்டும்.புத்தம் புது ஜார் போல தயார் செய்தேன் .  

PR NO 1 முதல் 100 வரை முதல் ஜாரிலும் 
PR NO 101 முதல் 200 வரை இரண்டாவது ஜாரிலும் 
மொத்தம் 10 ஜார்களில் 1000 specimen களை அடைத்துவிட்டேன் . 
சிறிய   bottle ல் வரும் specimen களை ஒரு tray களில் எண் வாரியாக  Steel Rack ல்  அடுக்கி விட்டேன்.பேராசிரியர் கேட்ட உடன் 5 நிமிடங்களில் அவரது மேஜை மீது வைத்து விடுவேன் .
 
இதற்க்கு எனக்கு உதவியாக இருந்த திரு கோவிந்தராஜ்
திரு மாலகொண்டய்யா மாற்றும் மருத்துவமனை சுகாதார பணியாளர் களுக்கும் என் நன்றியை இப்போதும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
அறையை நன்றாக LYSOL ஊற்றி கழுவி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து 
Aether  spray செய்து போர்மலின் நெடியை குறைத்தேன் .
மறு  நாள் ஊதுபத்தி ஏற்றி அந்த அறையை மணக்க செய்தேன் . 



 .    

ஒய்வு பெற்ற பின்பும் VCB அவர்கள் அடிக்கடி அவர் உருவாக்கிய IOG என்கின்ற ஆய்வககத்திற்கென தனி   கட்டிடத்தை பார்வை இட வருவார் .அவ்வாறு வரும் போது போது specimen room ஐ பார்த்து வியந்து என்னை அழைத்து பாராட்டினார் 

நினைவுகள் தொடரும் ........
இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை என் வலை தளத்தில் google form ல் பதிவு இடவும் .பதிவுக்களுக்கு நினைவு பரிசு உண்டு 

                                                      https://site.srivaritech.com /bsb 

                                                         wa.me /c /919940581843
buy directly a good microscope from amazon use this link

<iframe sandbox="allow-popups allow-scripts allow-modals allow-forms allow-same-origin" style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=IN&source=ss&ref=as_ss_li_til&ad_type=product_link&tracking_id=bsbhealthca0f-21&language=en_IN&marketplace=amazon&region=IN&placement=B07GT1LSGZ&asins=B07GT1LSGZ&linkId=15064234cac0d94d00a8f8a33384419a&show_border=true&link_opens_in_new_window=true"></iframe>




என்னை ஏற்றி 1979விட்ட ஏணிப்படிகள் அத்தியாயம் எட்டு

 1979 


Stanley மருத்துவமனையில் பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் 24 மணி நேர லேபில் வேலை கிடைத்தது. 

இங்கு எனது முன்னோடிகள் திரு பூபதி மற்றும் பட்டாபி அவர்கள். 

இதில் பூபதி அவர்கள் phlebotomy பிரிவில் காலை 7:00 மணி முதல் பம்பரமாக சூழன்று நோயாளிகளுக்கு ரத்தம் எடுக்கும் வேகம் அபாரம். பட்டாபி அவர்கள் இன் செய்து டை அணிந்து கொண்டு வந்த ஒரே டெக்னீசியன். இங்கு 24 மணி நேர பிரிவில் இரண்டு இரவு மறுநாள் விடுப்பு இரண்டு பகல் ஒரு காலை என வேலை நேரம்.

இங்கு பிஎஸ்சி MSC படித்த demonstrator,non medical assistant போன்றவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் அனைத்து பயோ கெமிக்கல் பரிசோதனைகளையும் செய்ய வாய்ப்பு கிடைத்தது. Reagent preparation , standardisation போன்றவற்றை திறம்பட கற்றுக் கொண்டேன்.

இப்போது போல அப்போதெல்லாம் சிங்கிள் ஸ்டெப் பரிசோதனை அல்ல மூன்று ஸ்டெப் பரிசோதனைகள். Sample களை Deprotinisation செய்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுகர்,urea creatinine போன்ற பரிசோதனைகள் எனக்கு தரப்பட்டன. இங்கு நான் பயன்படுத்திய ஒரு short cut தொழில்நுட்பம். சுகருக்கான 2 ml புரோட்டின் free filtrate ஐ எடுத்த பிறகு மீதமுள்ள filtrate ல் creatinine க்கான reagent ஐ ஊற்றுவேன். தோராயமாக அப்பொழுதே மஞ்சள் நிறமானது பிங்க் நிறமாக மாறிய சாம்பிள்களை கவனமாக பரிசோதிக்க அடுத்த டெக்னீஷனுக்கு  தருவேன். அனைத்தும் high value  ஆக இருப்பதை கண்டு பிரமிப்பார்கள்.

அடுத்து chloesterol பரிசோதிக்க அடர் அமிலங்களை ஊற்ற burette ஐ பயன்படுத்துவார்கள். சில சமயங்களில் ஆபத்தாக முடியும். நான் அப்போது முதல் முறையாக அமிலத்தை மெஷரிங் சிலிண்டரில் ஊற்றி அதில் 10 ml pipette மூலம் வாய் வைத்து உரியாமல் atmostric pressure மூலம் எடுத்து 2 ml பரிசோதனை குழாய்களில் விடுவேன்.

பின் நாட்களில் BP machine ல் உள்ள pressure cup ,rubber tube மற்றும் ஒரு கிளிப் பயன்படுத்தி தேவையான அளவு vacume ஏற்படுத்தி automatic pipette போல பயன்படுத்தி அவர்களின் பாராட்டை பெற்றேன். இப்போது உள்ள ஆட்டோமேட்டிக் பிற்பட்டுகள் மூலம் நடத்த அமிலங்களை பயன்படுத்த இயலாது. இன்னும் ஒரு நண்பர் 5ml glass syringe மூலம் இந்த செயலை எளிமையாக்கினார்.

அப்போது என்னுடன் பணியாற்றிய திரு ஸ்டாலின் அவர்கள் கிரேட் I lab technician ஆக பணியாற்றி மாலை கல்லூரியில் பிஎஸ்சி முடித்து demonstrator ஆகி அவரே நான் மெடிக்கல் அசிஸ்டெண்ட் ஆகி பின்னர் MSC முடித்து விடுப்பில் சென்று MBBS முடித்து மருத்துவராக உயர்ந்தார்.

இந்த நிகழ்வை முன் உதாரணமாக எடுத்து இன்று இந்த விளம்பரத்தை எனது மாணவர்களுக்கு அளித்து வருகிறேன்.

இந்த காலகட்டத்தில் எனக்கு ஓய்வு நேரம் நிறைய இருந்ததால் கிளினிக்கல் பெத்தாலஜி பெதொலஜி  மைக்ரோ பயாலஜி உங்களுக்கு சென்று சிறிது நேரம் அவர்களிடம் சில நுட்பங்களை கற்றுக் கொள்வேன்.

முக்கிய நிகழ்வாக அப்போது விடுதியில் தங்கி படிக்கும் சில மருத்துவ மானவர்கள் குடிநீர் தொற்று ஏற்பட்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்கள். முக்கியமாக அப்பொழுது ராமலிங்கம் என்ற சீனியர் டெக்னீசியன் முதல் முயற்சியாக ஒரு சிறுநீர் சேம்பிலை எடுத்து அப்பொழுது புதிதாக வாங்கிய டார்க் ground microscope ல் வைத்து பார்க்கும் பொழுது ஏதோ புதிதாக நெளிவதை கண்டார். இப்போது அங்கு பேராசிரியராக பணியாற்றிய திரு.மோசஸ் அவர்களை அழைத்து அவருக்கு காட்டி இவர் மூலமாக இது leptospira என தெரிந்து கொண்டோம்.

1981 பணி நிரந்தரம் கிடைத்தும் 1982 ம் MBBS படிப்பில் முதல் ஆண்டு நீக்கப்பட்டதால் அங்கு பணியில் நீக்க ஆணை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என் சீனியர்களும் மருத்துவர்களும் அவர்களாகவே முன்வந்து மருத்துவ விடுப்பு எடுத்து எனக்கு பணிநீடிப்பு செய்து அவர்களாகவே ட்ரான்ஸ்பர் அண்ட் போஸ்டிங் என்ற முறைப்படி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றல் வாங்கி தந்தார்கள்.

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் நாம் செய்யும் பணியை சிறப்பாக செய்தால் நன்மைகள் தானாக நடக்கும்.

நாளை சந்திப்போம்.... இந்த வீடியோ பார்க்க தவறாதீ்ர்கள்.


https://youtu.be/wds1AJdIwPU

buy a microscope and start your own laboratory use this link to buy directly from amazon easy EMI option available

<iframe sandbox="allow-popups allow-scripts allow-modals allow-forms allow-same-origin" style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=IN&source=ss&ref=as_ss_li_til&ad_type=product_link&tracking_id=bsbhealthca0f-21&language=en_IN&marketplace=amazon&region=IN&placement=B07GT1LSGZ&asins=B07GT1LSGZ&linkId=15064234cac0d94d00a8f8a33384419a&show_border=true&link_opens_in_new_window=true"></iframe>



செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

என்னை ஏற்றி விட்ட  ஏணி படிகள்  அத்தியாயம்  7

1974 முதல் 1979 வரை ராம கிருஷ்ணா மடத்து மருத்துவ மனையில் 
பணி புரிந்த கால கட்டத்தில் பல  மருத்துவ பேராசிரியர்கள் அங்கே கௌரவ டாக்டர்கலாக பணி புரிந்தார்கள் .
இங்கேயும் எனக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை தான் வேலை  நேரம் 
.
எனவே அப்போதே சொந்தமாக ஓர் ஆய்வகத்தை டாக்டர் பரிமளம் அவர்களோடு இணைந்து சென்னை கோடம்பாக்கத்தில் ஆரம்பித்தேன் .
பின்னர் அவர் ADMS ஆக பதவி உயர்வு பெற்றதால்

 அந்த  ஆய்வகத்தை வடபழனி MGR பள்ளி அருகில் Dr பத்மநாபன் அவர்களுடன் இணைந்து ஹேமா இரத்த பரிசோதனை நிலையம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தேன். இவர் புகழ்பெற்ற மாயவரம் ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் பேரன். நடிகர் ஏவிஎம் ராஜன் அவர்களின் மைத்துனர் நடிகர் தியாகு அவர்களின் அண்ணன். மற்ற இரு அண்ணன்கள் ஒருவர் தலைமை நீதிபதி மற்றவர் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் தம்பி வழக்கறிஞர். பின்னாலில்அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் மருமகன் ஆனார். 
இவரது திருமணம் திருச்சியில்  வெகு சிறப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடந்தது.

இந்த காலகட்டத்தில்  கலைஞர், மேயர் சா.கணேசன், 
மு. கண்ணப்பன், T.R. Balu, அன்பில் தர்மலிங்கம் ,பொய்யாமொழி  போன்றவர்களின் நட்பு கிடைத்தது.வருடம் ஒரு முறை முத்தமிழ் அறிஞர்
 கலைஞர் .அவர்களுடன் விருந்துண்ண வாய்ப்பும்  கிடைத்தது .
இந்த காலகட்டத்தில் திரு ஏ வி எம் ராஜன் அவர்களின் மகன் வேலு அவர்களுடன் இணைந்து திரைப்படங்களை காலை காட்சியாக வெளியிட்டு சிறிது சிறிதாக வளர்ந்து பின்னர் ஒரு தலை ராகம் படத்தை Liberty தியேட்டரில் விநியோகம் செய்யும் அளவிற்கு வளர்ந்தோம்.  

 இங்கேயும் ஓர் நுட்பத்தை முதல் முதலாக அறிமுகப்படுத்தினேன் . ஒரேபடத்தை இரு திரையரங்குகளில் ஷிபிட்டிங் முறையில் காட்சி படுத்த்தினேன் .

மூன்றாம் வகுப்பு ரசிகர்களுக்கு பால்கனியில் படம் பார்க்க ஆவலுடன் இருப்பார்கள். 10 ரூபாய்க்கு 3 பால்கனி டிக்கெட் முன்னராக கூப்பன் மூலம் விற்று ஹவுஸ்புல் காட்சிகளாக நிகழ்த்தி காட்டினேன் .


இந்த காலகட்டத்தில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் அன்பரசு சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் இதயராஜ் போன்றவர்கள் 24 மணி நேர மருத்துவமனை என்ற ஒரு புதிய நுட்பத்தை ₹5 ரூபாய் கட்டணத்தில் மருந்து ,மாத்திரை, மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள்.
இவர்களது எல்லா கிளைகளிலும் எனது ஆய்வகம் அமையப்பெற்று அங்காங்கே பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தேன்.10 ரூபாயில் tc ,dc ,esr ,urine & motion பரிசோதனை வடபழனி பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு அளித்தேன்.
 
இந்த சமயத்தில் தான் எனக்கு ஸ்டான்லி மருத்துவமனையில்  நிரந்தர வேலை கிடைத்தது.
மீண்டும் சந்திப்போம்.. 

start your own laboratory buy a microscope directly from amazon  use this link

<iframe sandbox="allow-popups allow-scripts allow-modals allow-forms allow-same-origin" style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=IN&source=ss&ref=as_ss_li_til&ad_type=product_link&tracking_id=bsbhealthca0f-21&language=en_IN&marketplace=amazon&region=IN&placement=B07GT1LSGZ&asins=B07GT1LSGZ&linkId=15064234cac0d94d00a8f8a33384419a&show_border=true&link_opens_in_new_window=true"></iframe>

சனி, 29 ஜூலை, 2023

ஏணிப்படிகள் அத்தியாயம் ஆறு

நண்பர்களுக்கு வணக்கம் என்னை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஒரு அத்தியாயத்திலும் ஒரு நான் அறிந்த நுணுக்கத்தை கற்றுவிக்க ஆசைப்படுகிறேன் நீங்கள் அதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

அரசு மருத்துவமனையில் பணி புரியும்போது transfer அண்ட் போஸ்டிங் என்ற முறையில் அரசாணையை பயன்படுத்தி மற்ற இரு நண்பர்களும் கண் மருத்துவமனையில் வேலையை பெற்று விட்டார்கள்.

இந்த விவரம் தற்போது தற்காலிக அரசு பணியில் பணி புரிபவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

வேலை இழந்த மறுநாளே அப்பொழுது இயக்குனராக இருந்த F.S.Phillips அவர்கள் சிபாரிசின் படி சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் ஆய்வுக்கூடத்தில் பணி நான் வாங்கிய அரசு சம்பலத்திலேயே கிடைத்தது.

கிங் நிலையத்தில் ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு மைக்ரோஸ்கோப் நால்வருக்கு ஒரு centrifuge அனைவருக்கும் ஒரு colorimeter அதநையும் biochemist தான் இயக்குவார்.


ஶ்ரீ ராம கிருஷ்ண மடத்தில் சிபாரிசு இருந்தபோதிலும் தலைமை மருத்துவர் ஸ்டான்லி 1963 ல் RMO ஆக இருந்த  Dr KAK என்னை interview செய்தார். கேள்விகள் எதனையும் கேட்காமல் கேட்காமல் பெரிய இடத்திலிருந்து சிபாரிசு உடன் வந்திருக்கிறாய் , நீயே பிளட் கலெக்ட் செய்து சுகர் டெஸ்ட் செய்து காண்பி என்று கூறிவிட்டார். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நபருக்கு எளிதில் அழகாக ரத்தம் எடுத்து வைத்து விட்டேன். அவர் எதிரில் அந்த பரிசோதனைக்கு தேவையான மூன்று டெஸ்ட் tube இரண்டு pipette இவைகளை எடுத்துச் சென்று அதனை கழுவி காய வைத்து விட்டு ஐயா இது காய்ந்த பிறகு தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினேன் சரி பரிசோதனை செய்து ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு என்னுடைய டேபிளுக்கு வா என்று சென்று விட்டார். இந்த கால அவகாசத்தில் கலோரி மீட்டர் அருகில் சென்று அதை எவ்வாறு ஆன் செய்வது என்பதில் திணறிவிட்டேன் இந்த பயிற்சி எனக்கு கிங் நிலையத்தில் கிடைக்கவில்லை என்றாலும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் போதும் கிடைக்கவில்லை என்பதாலும் அங்கே திணறி விட்டேன். ஆனால் all ways use clean and dry glasswares என்ற பயிற்சி அங்கே உதவியது. நான் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது முதலில் மின்சாரம் சரியாக வருகிறதா பின்னர் விசையை அழுத்தியவுடன் மின் தொடர்பு கருவிக்கு கிடைத்ததா என்பதிலிருந்து படிப்படியாக மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தேன்.

சுமார் மூன்றாண்டுகள் மொத்த ஆய்வகதையும் இயக்கி நிலையான வருமானத்தை நிர்வாகத்திற்கு அளித்தேன். மடத்தின் நிர்வாகத்தில் இருந்த பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று blood group முகாம்களின் மூலம் செய்து அளித்தேன்.

1974 ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள். அப்போது Dr.KAK அவர்கள் டீன் prof.Aswathaman எனக்கு பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் வேலைவாய்ப்பு அளித்தார்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்.






Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...