என்னை ஏற்றி விட்ட ஏணி படிகள் அத்தியாயம் 10
முன்னர் குறிப்பிட்டபடி Prof .VCB அவர்கள் முன்நெடுத்து ஆய்வகத்திற்கென்று தனி கட்டிடம் கட்ட காரணமாக இருந்தார்
Biochemistry , Pathology ,Microbiology , Library ,Artist , Micro Photographer ,Musium
Conference hall , Director office என அருமையாக அமைத்தார் .
அங்கே திரு .சூசைராஜ் அவர்கள் Artist cum micro photographer ஆக பணி மிகவும் திறமை வாய்ந்தவர். அரசு ஓவிய கல்லூரியில் நடிகர்.சிவகுமாருடன் பயின்றவர் .திருக்குறளுக்கான ஓவியம் ஒன்று வள்ளுவர் கோட்டத்தில் உள்ளது.பெரும்பாலும் .தமிழகத்தில் ஓரிருவரே அந்த பதவியில் இருந்தனர் முக்கியமான மாதிரிகளை SLR camera மூலம் படம் எடுப்பார் .அவரிடம் microscopic அடாப்டர் இருந்தது .பெரும்பாலும் கருப்பு வெள்ளை யில் படம் எடுப்பார்.
சில முக்கியமான ஸ்லைடுகளை கலரில் தயாரிக்க வேண்டி இருக்கும்
ஒரு ஸ்லைடு தயாரிக்க Rs 500 ஆகும்.
.மருத்துவ மாணவர்களால் அந்த அளவு செலவு செய்ய இயலாது .
எனக்கு திரைப்பட உலகில் நல்ல தொடர்பு இருந்ததால் என்னுடைய
தம்பி A .சபாபதி பிரபல கேமராமேன் ,
என் நண்பன் பாலகிருஷ்ணன்cini laboratory யில் பணி புரிந்ததாலும் இலவசமாக கலர் பிலிம் கொண்டுவந்து பயிற்சி மருத்துவர்களுக்கு தேவை யான படங்களை உருவாக்கி கொடுத்தோம் இன்று அந்த மருத்துவர்கள் சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமையாளராக உள்ளனர்.திருமதி ரமணி சிவராமன் ,NSK PADMINI, கமலா செல்வராஜ் ,ஜெயம் கண்ணன்,பாண்டியன் ,ராதா பாண்டியன் ,கோபிநாத் பத்மாவதி கோபிநாத் ,ஸ்ரீதேவி ,NSK பத்மினி ,சிவரஞ்சனி போன்ற பலரின் நன்மதிப்பை பெற்றேன் .
ஜூனியர் technician கள் கட்டாயமாக OP டூட்டி செய்ய வேண்டும் gynaec op யில்
TV & Moniliasis பார்க்க வேண்டும் இங்கே அது வரை எவரும் தராத ஓரு report ஐ அளித்ததேன் .அது Leptothrix என்னும் ஓர் fungai .
பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள எங்கள் வளாகத்திலேயே அமைந்த நூலகம் தான் .கிங் நிலையத்திலும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் நூலகம் இருந்தாலும் அங்கே நுட்புறங்களை அனுமதிக்க மாட்டார்கள் .இங்கே எனக்கு அந்த வசதி கிட்டியது .அங்கே கிடைத்த மாத மருதுவ இதழ்கள் JAMA .ICMR news bulletin,AACC,IFCC போன்ற இதழ்கள் எனக்கு மிகவும் உதவியது
வெள்ளை படுத்தல் என்ற நிலையில் இந்த பரிசோதனை மிக்க பலனை தரும்.ஒரு துளி normal saline ஒரு துளி 40% KaOH போதும். அளவு Positive ரிப்போர்ட் தருவதால் எனக்கு பாசிட்டிவ் பாலா என்ற பெயரை பெற்றேன் .

antinatel OP யில் urine albumin sugar மற்றும் tallquist முறையில் ஹீமோகுளோபின் பரிசோதிக்க வேண்டும் .தினம் 100 கர்ப்பிணிகள் வருவார்கள் பல ஆண்டுகளாக சிறுநீரை காய்ச்சிதான் பரிசோதித்தார்கள்
நான் ஏற்கனவே biochmistry யில் பணி யாற்றி இருந்ததால் 3% sulpho salicylic acid ஐ biochemistry லேபில் பெற்று albumin பரிசோதனை ஐ மிக எளிமையாகவும் துல்லியமாகவும் செய்து தர வழி கோலினேன் .
மிகுந்த சிரமங்களுக்கு பிறகு medical store கீப்பர்களிடம் போராடி urine strip for albumin & sugar op ல் இன்று வரை தொடர்கிறது .
இந்த எளிய சிறுநீர் பரிசோதனை preeclamsia என்கின்ற நிலையிலுருந்து கர்ப்பிணி பெண் களை பேறு காலத்தில் காப்பாற்ற உதவும்.
கர்ப்பிணி பெண் களுக்கு இரத்த சோகை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .Anemia complicating Pregnancy என்பது அந்த அளவிற்கு ஆபத்தை விளைவிக்க கூடியது .
Tallquist முறையில் ஹீமோகுளோபின் அளவை கணக்கிடுவது துல்லியமாக இருக்காது இது எனக்கு திருப்தியை தர வில்லை .எனவே shalis adam முறையில் பரிசோதிக்க ஏற்பாடு செய்தேன் வேலை பளு அதிகமானதல் மற்ற நுட்புனர்களின் கோபத்தை சம்பாதித்து கொண்டேன்.
இந்த முறையில் 100 நபர்களுக்கு பரிசோதனை செய்வது மிகவும் சிறமம் .
எனகிருந்தே .அயல்நாட்டு தொடர்பு மூலம் German தயரிப்பான hemocheck என்கின்ற WHO வின் ஒப்புதலை பெற்ற ஓர் முறையை அறிமுகப்படுத்தி
2 gram% முதல்14 gram % வரை மிக துல்லியமாக ஒரே ஒரு ருபாய் செலவில்
98% துல்லியமாக sever anemia வை கணிக்கலாம் .
www .copackservice .de என்ற் வளைத்தை
பார்ர்வையிடுங்கள் .
இதன் இந்திய தயாரிப்பை வாங்க நினைப்பவர்கள் wa .me /c /919940581843
என்ற என் வாட்சப் செயலியை நாடுங்கள் .
இலவச முகாம் நடத்துவதற்கும் இரத்த வங்கி யில் கொடையாளர்கள
தெரிவு செய்வதற்கும் பள்ளிகளில் வளர் இளம் பெண்களுக்கு இரத்த பரிசோதனை செய்வதற்கும் மின்சாரமில்லாத மலைவாழ் மக்களுக்கு பரிசோசனை செய்வதற்கும் உகந்தது .
இன்னும் தொடரும் .......
.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக