1979
Stanley மருத்துவமனையில் பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் 24 மணி நேர லேபில் வேலை கிடைத்தது.
இங்கு எனது முன்னோடிகள் திரு பூபதி மற்றும் பட்டாபி அவர்கள்.
இதில் பூபதி அவர்கள் phlebotomy பிரிவில் காலை 7:00 மணி முதல் பம்பரமாக சூழன்று நோயாளிகளுக்கு ரத்தம் எடுக்கும் வேகம் அபாரம். பட்டாபி அவர்கள் இன் செய்து டை அணிந்து கொண்டு வந்த ஒரே டெக்னீசியன். இங்கு 24 மணி நேர பிரிவில் இரண்டு இரவு மறுநாள் விடுப்பு இரண்டு பகல் ஒரு காலை என வேலை நேரம்.
இங்கு பிஎஸ்சி MSC படித்த demonstrator,non medical assistant போன்றவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் அனைத்து பயோ கெமிக்கல் பரிசோதனைகளையும் செய்ய வாய்ப்பு கிடைத்தது. Reagent preparation , standardisation போன்றவற்றை திறம்பட கற்றுக் கொண்டேன்.
இப்போது போல அப்போதெல்லாம் சிங்கிள் ஸ்டெப் பரிசோதனை அல்ல மூன்று ஸ்டெப் பரிசோதனைகள். Sample களை Deprotinisation செய்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுகர்,urea creatinine போன்ற பரிசோதனைகள் எனக்கு தரப்பட்டன. இங்கு நான் பயன்படுத்திய ஒரு short cut தொழில்நுட்பம். சுகருக்கான 2 ml புரோட்டின் free filtrate ஐ எடுத்த பிறகு மீதமுள்ள filtrate ல் creatinine க்கான reagent ஐ ஊற்றுவேன். தோராயமாக அப்பொழுதே மஞ்சள் நிறமானது பிங்க் நிறமாக மாறிய சாம்பிள்களை கவனமாக பரிசோதிக்க அடுத்த டெக்னீஷனுக்கு தருவேன். அனைத்தும் high value ஆக இருப்பதை கண்டு பிரமிப்பார்கள்.
அடுத்து chloesterol பரிசோதிக்க அடர் அமிலங்களை ஊற்ற burette ஐ பயன்படுத்துவார்கள். சில சமயங்களில் ஆபத்தாக முடியும். நான் அப்போது முதல் முறையாக அமிலத்தை மெஷரிங் சிலிண்டரில் ஊற்றி அதில் 10 ml pipette மூலம் வாய் வைத்து உரியாமல் atmostric pressure மூலம் எடுத்து 2 ml பரிசோதனை குழாய்களில் விடுவேன்.
பின் நாட்களில் BP machine ல் உள்ள pressure cup ,rubber tube மற்றும் ஒரு கிளிப் பயன்படுத்தி தேவையான அளவு vacume ஏற்படுத்தி automatic pipette போல பயன்படுத்தி அவர்களின் பாராட்டை பெற்றேன். இப்போது உள்ள ஆட்டோமேட்டிக் பிற்பட்டுகள் மூலம் நடத்த அமிலங்களை பயன்படுத்த இயலாது. இன்னும் ஒரு நண்பர் 5ml glass syringe மூலம் இந்த செயலை எளிமையாக்கினார்.
அப்போது என்னுடன் பணியாற்றிய திரு ஸ்டாலின் அவர்கள் கிரேட் I lab technician ஆக பணியாற்றி மாலை கல்லூரியில் பிஎஸ்சி முடித்து demonstrator ஆகி அவரே நான் மெடிக்கல் அசிஸ்டெண்ட் ஆகி பின்னர் MSC முடித்து விடுப்பில் சென்று MBBS முடித்து மருத்துவராக உயர்ந்தார்.
இந்த நிகழ்வை முன் உதாரணமாக எடுத்து இன்று இந்த விளம்பரத்தை எனது மாணவர்களுக்கு அளித்து வருகிறேன்.இந்த காலகட்டத்தில் எனக்கு ஓய்வு நேரம் நிறைய இருந்ததால் கிளினிக்கல் பெத்தாலஜி பெதொலஜி மைக்ரோ பயாலஜி உங்களுக்கு சென்று சிறிது நேரம் அவர்களிடம் சில நுட்பங்களை கற்றுக் கொள்வேன்.
முக்கிய நிகழ்வாக அப்போது விடுதியில் தங்கி படிக்கும் சில மருத்துவ மானவர்கள் குடிநீர் தொற்று ஏற்பட்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்கள். முக்கியமாக அப்பொழுது ராமலிங்கம் என்ற சீனியர் டெக்னீசியன் முதல் முயற்சியாக ஒரு சிறுநீர் சேம்பிலை எடுத்து அப்பொழுது புதிதாக வாங்கிய டார்க் ground microscope ல் வைத்து பார்க்கும் பொழுது ஏதோ புதிதாக நெளிவதை கண்டார். இப்போது அங்கு பேராசிரியராக பணியாற்றிய திரு.மோசஸ் அவர்களை அழைத்து அவருக்கு காட்டி இவர் மூலமாக இது leptospira என தெரிந்து கொண்டோம்.
1981 பணி நிரந்தரம் கிடைத்தும் 1982 ம் MBBS படிப்பில் முதல் ஆண்டு நீக்கப்பட்டதால் அங்கு பணியில் நீக்க ஆணை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என் சீனியர்களும் மருத்துவர்களும் அவர்களாகவே முன்வந்து மருத்துவ விடுப்பு எடுத்து எனக்கு பணிநீடிப்பு செய்து அவர்களாகவே ட்ரான்ஸ்பர் அண்ட் போஸ்டிங் என்ற முறைப்படி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றல் வாங்கி தந்தார்கள்.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் நாம் செய்யும் பணியை சிறப்பாக செய்தால் நன்மைகள் தானாக நடக்கும்.
நாளை சந்திப்போம்.... இந்த வீடியோ பார்க்க தவறாதீ்ர்கள்.
https://youtu.be/wds1AJdIwPU
buy a microscope and start your own laboratory use this link to buy directly from amazon easy EMI option available
<iframe sandbox="allow-popups allow-scripts allow-modals allow-forms allow-same-origin" style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=IN&source=ss&ref=as_ss_li_til&ad_type=product_link&tracking_id=bsbhealthca0f-21&language=en_IN&marketplace=amazon®ion=IN&placement=B07GT1LSGZ&asins=B07GT1LSGZ&linkId=15064234cac0d94d00a8f8a33384419a&show_border=true&link_opens_in_new_window=true"></iframe>



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக